Nattamai teacher : நாட்டாமை டீச்சர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை : நாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் வெளியானத் திரைப்படம் நாட்டாமை.
இத்திரைப்படத்தில் மனோரமா, மீனா, குஷ்பூ, சங்கவி, பொன்னம்பலம் ஆகியோர் நடித்திருந்தனர்.

சரத்குமாரின் நாட்டாமை : 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் பல சாதனைகள் படைத்த நாட்டாமை திரைப்படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட வெளியானது. இப்படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக்காகி அங்கேயும் சக்கைப்போடு போட்டது. அதேபோல இந்தியில், அனில் கபூர், டிம்பில்கபாடியா நடிப்பில் வெளியானது.
கொழுக் மொழுக் நடிகை : இந்த படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ராணி , கொழுக்கு மொழுக்குனு இருந்த இந்த நடிகை நாட்டாமை படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார். அந்த படத்தில் வித்தியாசமான பேக்ரவுண்ட் இசையோடு சரத்குமாரும் டீச்சரும் ஒரு வீட்டில் நெருக்கமாக இருப்பார்கள். இந்தப் படம் முழுவதும் டீச்சர் அனைவரின் கண் முன்னே வந்து போவார்.

பல படங்களில் : டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்த நடிகை ராணி, ராமராஜன் கதாநாயகனாக நடித்த வில்லுப்பாட்டு என்ற படத்தில் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு படவாய்ப்பு வராததால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அம்மணி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.
எப்படி இருக்கிறார் தெரியுமா? ஜெமினி படத்தில் விக்ரமுடன் இணைந்து ஓபோடு பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது. படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, இந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நம்ம நாட்டாமை டீச்சரை பார்த்து அட நம்ம நாட்டாமை டீச்சரா இவங்க என்று ஏக்க பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











