நட்டி குமார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி- கஸ்தூரிராஜா பாய்ச்சல்

By Shankar

Kasthoori Raja
3 படத்தை விநியோகிப்பதாகக் கூறி வாங்கிய நட்டி குமார் ஒரு மோசடிப் பேர்வழி என்று தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா கூறினார்.

தனுஷ் நடிக்க, அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. இந்தப் படம் கொலைவெறி என்ற பாட்டுக்கு கிடைத்த பிரபலம் காரணமாக ஏக எதிர்ப்பார்ப்புக்கு உள்ளானது. பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டனர்.

ஆனால் படம் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது. நஷ்டப்பட்டவர்கள் புலம்ப ஆரம்பித்தனர். ஆனால் அப்போது தனுஷோ, படத்தின் தயாரிப்பாளரான அவர் தந்தையோ எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, ரஜினி இந்த நஷ்டத்தைக் கொடுப்பார் என செய்தி பரப்ப ஆரம்பித்தனர்.

தெலுங்கில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட நட்டிகுமார் என்பவர் தனக்கு பெரும் நஷ்டம் வந்துவிட்டதாகவும், இதை ரஜினி கொடுப்பார் என்றும் பேட்டியளிக்க ஆரம்பித்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினியே மறுப்பு தெரிவிக்க வேண்டி வந்தது. அப்போதும்கூட கஸ்தூரிராஜா அமைதியாக இருந்துவிட்டார். அடுத்து கஸ்தூரிராஜா, தனுஷ், ஐஸ்வர்யா, விமலகீதா என கஸ்தூரிராஜா குடும்பத்தினர் அனைவர் மீதும் ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் நட்டிகுமார்.

இந்த நிலையில், இப்போது 3 பட நஷ்டம் குறித்துப் பேசியுள்ளார் கஸ்தூரி ராஜா.

நட்டிகுமார் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "3 படத்தின் தெலுங்கு உரிமைக்கு நட்டி குமார் பேசிய விலை ரூ 4.35 கோடி. இதில் ரூ 2.50 கோடியை ஒப்பந்தம் கையெழுத்தானபோது தந்தார். மீதித் தொகைக்கு இரண்டு செக்குகள் கொடுத்தார். ஆனால் இந்த செக்குகள் பணமின்றி ரிடர்ன் ஆகிவிட்டன. எத்தனையோ முறை கேட்டும் அவரிடமிருந்து பதிலே இல்லை. எங்களை ஏமாற்றுவதே அவர் நோக்கமாக இருந்திருக்கிறது.

மேலும் ஒப்பந்தத்தை மீறி, எங்களைக் கேட்காமலே 3 தெலுங்கு சேட்டிலைட் ரைட்ஸை விற்றுவிட்டார் நட்டி குமார். அவர் ஒரு மோசடிக்காரர் என்பது தெரிந்துவிட்டது.

தனது தவறை மறைக்க ரஜினி, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகியோரை இழுத்துவிட்டார். இவர்கள் யாருக்கும் இதில் தொடர்பில்லை, என் குடும்பத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கும் உரிமை நட்டி குமாருக்கு இல்லை.

ஆர்கே புரொடக்ஷன்தான் அனைத்துக்கும் பொறுப்பு. எனவே தேவையின்றி எங்கள் குடும்பத்தினரை அவமதித்த நட்டிகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X