சிபிராஜ் படத்திலிருந்து தாவிய கெளதம் மேனன்.. அவருக்குப் பதில் நட்டி!

சென்னை: அறிமுக இயக்குநர் அன்பு இயக்கும் சிபிராஜின் வால்டர் படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதில் நட்ராஜ் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில் கெளதம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இந்த செய்தியை இயக்குநர் அன்பு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கதா பாத்திரத்தை கெளதம் ஏற்க விரும்பினார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலக வேண்டியுள்ளதாக அன்பு கூறியுள்ளார்.

natti natraj to act instead of gowtham vasudeva menon

பின்பு, 'நம்ம வீட்டு பிள்ளை' வெளியான போது நட்டியை அணுகி முழு ஸ்கிரிப்டையும் கூறியபோது, அந்த கதாபாத்திரத்தை செய்ய ஒப்புக்கொண்டாராம். ஏறக்குறைய 15 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப் பட்டு , இப்போது அவரது பகுதிகளை படமாக்கி வருகின்றனர்.

சிபிராஜ் போலீஸ்காரராக நடிக்க, நட்டியின் கதாபாத்திரம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது. அவர் வில்லனா என்பரை தற்போது கூற முடியாது எனத் தெரிவித்துள்ள இயக்குநர் இப்படத்திற்காக நட்டி முழுமையாக கெட்-அப் மாற்றத்தை செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் அவரது பகுதிகளை கும்பகோணம், தஞ்சை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கி வருகின்றனர்.

natti natraj to act instead of gowtham vasudeva menon

இது ஒரு புறம் இருக்க ஒரு படத்தின் நடிகர்கள் மாற்றப் படுவது சாதாரணம் என்றாலும் ஏற்கனவே படாதபாடு பட்டு இப்போது தான் என்னை நோக்கி பாயும் தோட்டாவை ரிலீஸ் செய்துள்ளார் கெளதம் மேனன்.

natti natraj to act instead of gowtham vasudeva menon

விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் "F.I.R" (Faizal Ibrahim Raiz). இதனை விஷ்ணு விஷாலே தயாரிக்க இப்படத்தில் கெளதம் மேனன் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்தி அடிபடுகிறது. இந்த படத்தில் நடிக்கத்தான் அவர் வால்டரிலிருந்து விலகினார் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X