TN2026 Teaser: ஜனநாயகன் வரலைன்னா என்ன?.. விஜய்யோட அரசியல் பயோபிக் படமே ஏப்ரல் 10 வரப்போகுதே?

சென்னை: விஜய்யின் நெருங்கிய நண்பரான நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள TN2026 தங்கநட்சத்திரம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா ஏற்கனவே அப்பாவை வைத்து ராஜாகிளி படத்தை இயக்கிய நிலையில், தற்போது நட்டி நட்ராஜை வைத்து அரசியல் படத்தை எடுத்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி தமிழ்நாட்டு அரசியலை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ள TN2026 தங்கநட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Natty Natraj look alike TVK Head Vijay in his latest TN2026 movie teaser

ரவி மோகனின் 'கராத்தே பாபு' மற்றும் விஜய்யின் ஜன நாயகன் உள்ளிட்ட படங்கள் தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நட்டி நட்ராஜ் படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளியாக காத்திருக்கிறது.

விஜய் பயோபிக்கா?: எம்ஜிஆருக்குப் பிறகு நடிகர் ஒருவர் தமிழ்நாட்டின் சிஎம் ஆகப் போகிறேன் என உச்சத்தில் இருக்கும் போது அதை உதறித்தள்ளிவிட்டு அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்ன என்ன பிரச்னைகள் உருவாகும், அவர் அதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார் என்கிற கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசரை பார்த்தால் அப்படியே விஜய் பயோபிக் போலவே இருக்கு என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் காட்டப்படும் அந்த கட் அவுட் அப்படியே விஜய் நடிக்க நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்த புலி படத்தின் கட் அவுட் போலவே உள்ளதாகவும், விஜய்யின் நரைத்த தாடி அரசியல் லுக்குடன் அப்படியே நட்டி நட்ராஜ் இந்த படத்தில் நடித்துள்ளாரே என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நட்டி நட்ராஜ் நய்யாண்டி: அமைதிப்படை போல இந்த படம் நட்டி நட்ராஜின் அரசியல் நய்யாண்டி படமாக வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக நித்யானந்தாவை ட்ரோல் செய்து கம்பி கட்ன கதை படத்தில் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார். கடந்த தீபாவளிக்கு வெளியான அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அதே நிலை இந்த படத்துக்கு வருமா? அல்லது விஜய் ரசிகர்கள் படத்தில் என்னதான் இருக்கு என பார்த்து ஹிட் அடிக்க வைப்பார்களா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். அர்ஜுன் மகளை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் தொடர்ந்து உமாபதி ராமையா இயக்குநராகவே மாறிவிட்டார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X