சாமியாராக மாறிய நட்டி நட்ராஜ்.. தமிழ் புத்தாண்டில் தரமான சம்பவம்.. அடுத்த சதுரங்க வேட்டையா?
சென்னை: கடந்த 2020ம் ஆண்டு கைலாசா நாட்டின் புதிய கரன்சி குறித்த அப்டேட் கிடைத்ததும், அது எப்படி இருக்கும்.. அதை பார்க்க தான் வெயிட்டிங் என நட்டி நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்போதே அடுத்த சதுரங்க வேட்டை படத்துக்கு நட்டி நட்ராஜ் அடிபோடுகிறாரா என்கிற கேள்விகள் கிளம்பியது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படத்தின் அட்டகாசமான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய்யின் யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நட்ராஜ் சுப்ரமணியத்தை சினிமா வட்டாரத்தில் பலரும் நட்டி என அன்புடன் அழைத்து வருகின்றனர். நட்டி நட்ராஜ் என்றே தன்னை அவரும் சினிமாவில் பிரபலப்படுத்தி வருகிறார்.

தளபதி விஜய்யை வைத்து ஜன நாயகன் படத்தை இயக்கி வரும் எச். வினோத் முதன் முதலாக தான் அறிமுகமான படத்தின் ஹீரோவே நட்டி நட்ராஜ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சதுரங்க வேட்டை படத்தை பார்த்துவிட்டு தமிழ் சினிமாவே என்ன இந்த பையன் இப்படி டைரக்ட் பண்றான் என பலரும் வியந்தனர். அதே போல நட்டி நட்ராஜின் நடிப்புத் திறமையை பார்த்து வேறலெவல் என கொண்டாடினர்.
மகாராஜா படத்தில் சிக்ஸர்: சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் எஸ்.ஜே. சூர்யா போல ஹீரோவாகவும் துணை நடிகராகவும் தூள் கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால் அதிரடி காட்டியிருந்தார் நட்டி நட்ராஜ். இந்நிலையில், அவர் ஹீரோவாக அடுத்து கம்பி கட்ன கதை என்கிற படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நித்யானந்தாவாக நட்டி நட்ராஜ்: சாமியாராக மாறி தனியாக ஒரு நாட்டையே உருவாக்கி நட்டி நட்ராஜ் ஆடும் மங்காத்தா தான் இந்த படத்தின் கதை என தகவல்கள் கசிந்துள்ளன. சதுரங்க வேட்டை படத்தில் எம்எல்எம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு, சிட் ஃபண்ட் மோசடி என ஏகப்பட்ட ஃபிராடு தனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய நிலையில், கம்பி கட்ன கதை கூடிய சீக்கிரமே அப்படியொரு படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிமுக இயக்குநர் ராஜநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான மங்காத்தா மூவிஸ் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











