For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும்.. அடுத்த சதுரங்க வேட்டைக்கு அடி போடுகிறாரா நட்டி நடராஜ்?

  |

  சென்னை: நித்யானந்தாவின் கைலாசா நாட்டு ரிசர்வ் வங்கி பற்றியும், கரன்சி குறித்தும் தான் ஊர் முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.

  Nithyananda அதிரடி | Reserve Bank Of Kailasa | Oneindia Tamil

  திருவண்ணாமலையில் சாதாரண சாமியாராக சுற்றித் திரிந்த நித்யானந்தா, தற்போது கைலாசா எனும் நாட்டையே நிர்மானித்து ஆட்சி செய்து வருகிறார்.

  ஆனால், அந்த நாடு எங்கே இருக்கிறது என்பதைத் தான் இன்னமும் இன்டர்போல் போலீசாராலே கண்டுபிடிக்க முடியவில்லை.

  அடேங்கப்பா.. என்ன ஒரு போஸ்.. மேலாடை அணியாமல்.. வெறும் ஜீன்ஸ் மட்டுமே.. திணறவிடும் ரோஸ் பேபி!அடேங்கப்பா.. என்ன ஒரு போஸ்.. மேலாடை அணியாமல்.. வெறும் ஜீன்ஸ் மட்டுமே.. திணறவிடும் ரோஸ் பேபி!

  அப்பப்போ அப்டேட்

  அப்பப்போ அப்டேட்

  கைலாசா எங்கே இருக்கிறது என்றும் தெரியவில்லை.. நித்தியானந்தா எங்கே தலைமறைவாகி உள்ளார் என்பதும் புலப்படவில்லை. ஆனால், இந்த டெக் உலகின் உதவியால், அவரிடம் இருந்து அப்பப்போ செய்திகளும், அப்டேட்களும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனை பார்த்து மீம்களை போட்டு நக்கலடித்துக் கொண்டும் தான் இருக்கின்றனர்.

  விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

  விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

  இந்நிலையில், தற்போது அவர் கொடுத்துள்ள அப்டேட் ஒன்று மீண்டும் அவரை பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய ரிசர்வ் வங்கியையும், கரன்சி நோட்டுக்களையும் கைலாசா நாட்டில் நம்ம நித்தியானந்தா அறிமுகப்படுத்த உள்ளாராம்.

  கரன்சி எப்படி இருக்கும்

  கரன்சி எப்படி இருக்கும்

  கைலாசா நாட்டின் புதிய கரன்சி குறித்த அப்டேட் கிடைத்ததும், அது எப்படி இருக்கும்.. அதை பார்க்க தான் வெயிட்டிங் என நட்டி நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் அளவுக்கு நித்யானந்தாவின் அந்த அப்டேட் அனைவரையும் அதன்மீது ஆர்வம் கொள்ள செய்திருக்கிறது. நட்டி நட்ராஜின் இந்த கமெண்ட்டை பார்த்ததும் நெட்டிசன்கள் அவர் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டுகளில் ட்ரோல் செய்யத் தொடங்கி விட்டனர்.

  இந்த மோட்ல சொல்லுங்க சார்

  இந்த மோட்ல சொல்லுங்க சார்

  பித்தலாட்டம் செய்து மக்களை ஏமாற்றும் மோசடி நாயகனாக நட்டி நட்ராஜ் சதுரங்க வேட்டை படத்தில் நடித்து அசத்தி இருப்பார். தல அஜித்தின் வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத் இயக்கத்தில் வெளியான அந்த படத்தின் வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், "இந்த modeல சொல்லுங்க சார்.. கைலாசாவோட currency எப்படி இருக்க போகுதுங்ற எதிர்பார்போட எப்போவாவது இருந்திருக்கீங்களா சார்..!!" என கமெண்ட் அடித்துள்ளார்.

  சிஷ்யனா சேர்ந்துடுங்க

  சிஷ்யனா சேர்ந்துடுங்க

  "இந்தா இவரு கிட்ட சிஷ்யனா சேர்ந்துருங்க நட்டிசார் தெரிஞ்சிரும்" என கைலாசா நாட்டை உருவாக்கி ஆட்சி செய்து வரும் சோலோ கிங் நித்யானந்தாவின் போட்டோவை போட்டு கோத்து விட்டு செம ரகளை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், அது ஆர்.பி.ஐ இல்ல ஆர்.பி.கே என கைலாசாவை குறிப்பிட்டும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

  ஜெராக்ஸ் எடுத்துவிடுவேன்

  ஜெராக்ஸ் எடுத்துவிடுவேன்

  இந்த நெட்டிசன் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், "கிடைச்சா ஜெராக்ஸ் எடுத்து நித்தி சாமி டாலர்னு கோவில் வாசலில் கடை போட்டுடலாம்.. சார்" என செம நக்கலாக கமெண்ட் போட்டுள்ளார். " ஒரு வேலை ரூபாவின் மதிப்பை விட மதிப்பு அதிகமாக இருந்தால், நித்தியைய் எதிர்ப்பவர்கள் கூட பணத்தை பதுக்க வாய்ப்பு இருக்கு" என்றும் நாட்டு நடப்பை கமெண்ட்டாக போட்டு வருகின்றனர்.

  அடுத்த சதுரங்கவேட்டை

  அடுத்த சதுரங்கவேட்டை

  "என்ன தலைவா அடுத்த சதுரங்கவேட்டை டைரக்டா கைலாசாவுலயா" என இந்த நெட்டிசன் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜின் கைலாசா கரன்சி ட்வீட்டுக்கு கலகலப்பாக கமெண்ட் போட்டுள்ளார். சதுரங்கவேட்டை 2 படம் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவானாலும் இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அடுத்த சதுரங்கவேட்டை படத்தில் மீண்டும் நட்டி நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

  English summary
  Kailasha country currency will ready to release soon. Sadhuranga Vettai actor Natty Natraj excited to see the Kailasha currency in his recent tweet goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X