அந்த படம் ரிலீசாகட்டும்.. கொண்டாடுவீங்க.. தனுஷ் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் தனுஷின் புதிய படம் குறித்து வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் நட்டி எனும் நடராஜ்.

தளபதி விஜய்யின் யூத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நட்டி.

பின்னர் அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான பாஞ்ச், பிளாக் ஃப்ரை டே உள்ளிட்ட பல பெரிய பாலிவுட் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தனுஷ் படம்

தனுஷ் படம்

பிரபல ஒளிப்பாளராக கலக்கி வரும் நட்டி, யூத் படத்தில் இருந்தே சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். எச். வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நட்டிக்கு ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தனுஷின் கர்ணன் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

கொண்டாடுவீங்க

கொண்டாடுவீங்க

கத்தியுடன் தனுஷ் நிற்கும் 'கர்ணன்' மேக்கிங் புகைப்படம் வைரலான நிலையில், அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "மாரி செல்வராஜ்.. ஆக சிறந்த இயக்குநர்.. படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க" என டிவீட் போட்டுள்ளார்.

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

ரசிகர்கள் ரெக்வஸ்ட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், நட்டி, ரஜிஷா விஜயன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கர்ணன் படம் குறித்தும், மாரி செல்வராஜ் குறித்தும் நட்டி புகழ்ந்து இருக்கும் நிலையில், புதிய போட்டோக்களை வெளியிடுங்க என ரசிகர்கள் ரெக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்

பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திலேயே தான் ஒரு ஆகச் சிறந்த இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் நிரூபித்து விட்டார். நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும், கர்ணன் படத்தை வேற லெவலில் கொண்டு செல்வோம் என ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அடுத்த அசுரன்

அடுத்த அசுரன்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரது பாராட்டுக்களையும் பெற்றது. தனுஷின் வெறித்தனமான நடிப்பு உலகளவில் அந்த படத்திற்கு 100 கோடி வசூலை வாரி கொடுத்து இருந்தது. இந்நிலையில், கர்ணன் படத்திற்கும் 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

Dhanush Emotional message | உள்ளம் கனிந்த நன்றி | Dhanush k Raja
கர்ணனுக்கு அண்ணன்

கர்ணனுக்கு அண்ணன்

லாக்டவுனுக்கு முன்னதாக காட்ஃபாதர், வால்டர் உள்ளிட்ட படங்களில் நட்டி எனும் நடராஜ் நடித்து இருந்தார். இந்நிலையில், தற்போது தனுஷுடன் கர்ணன் படத்தில் அவருக்கு அண்ணனாக நட்டி நடித்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலியை சுற்றி உருவாகி வரும் இந்த படத்தை தடை செய்யக் கோரி கருணாஸ் அண்மையில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X