துள்ளும் இளமை, துடிப்பான சண்டை, கச்சிதமான கவர்ச்சி.. "கதம் கதம்"...!

கதம் கதம்.. இது ரஜினி படத்து வசனம். பாபா படத்தில் ரஜினி பேசிய வசனம். இதையே தலைப்பாக்கி ஒரு படம் உருவாகி வருகிறது. அதுவும் நீண்ட காலமாக.

பரபரப்பான போலீஸ் ஸ்டோரி என்ற அடை மொழியுடன் உருவாகி வரும் கதம் கதம் படத்தில் நட்டி என்கிற நடராஜ் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நந்தா. சனம் ஷெட்டி, சாரிகா, சங்கீதா, நிழல்கள் ரவி, கிரேன் மனோகர், சிங்கமுத்து என பெரும் நட்சத்திரக் குவியலே படத்தில் காணப்படுகிறது.

இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் காவல்துறையில் கூடுதல் இணை ஆணைராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான ராஜகோபால் என்பது படத்தின் விசேஷமாகும்.

கதம் கதம்...

கதம் கதம்...

ரஜினி நடித்த பாபா படத்தில் அடிக்கடி பேசும் வசனம்தான் கதம் கதம். இன்றளவும் இது பிரபலமானது. அதையே தலைப்பாக்கி விட்டார் படத்தின் இயக்குநரான பாபு தூயவன்.

தூயவன் மகன்...

தூயவன் மகன்...

இந்த பாபு தூயவன் வேறு யாருமல்ல, பிரபல கதாசிரியரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளருமான தூயவனின் மகன்தான். தூயவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்டவர்கள் படங்களுக்கு வசனம் எழுதிய பழம்பெரும் வசனகர்த்தா ஆவார்.

கெட்ட போலீசுடன் சண்டை...

கெட்ட போலீசுடன் சண்டை...

படத்தின் கதை என்னவென்றால், நல்ல போலீஸ் அதிகாரிக்கும், ஊழல் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதலே கதை என்று கூறுகிறார் பாபு தூயவன். இதில் நட்டி தான் கெட்ட போலீஸ் அதிகாரி. நந்தா நல்ல போலீஸ் அதிகாரி.

எல்லாம் கலந்தது...

எல்லாம் கலந்தது...

படத்தில் ஆக்‌ஷன் மட்டுமல்லாமல் அருமையான காதல், குடும்ப சென்டிமென்ட், திரில் என எல்லாமே கலந்து இருக்கிறதாம்.

இறுக்கத்தை தளர்த்த குத்துப்பாட்டு...

இறுக்கத்தை தளர்த்த குத்துப்பாட்டு...

ஒரு கவர்ச்சிகரமான குத்துப்பாட்டையும் படத்தில் சேர்த்து இறுக்கமான கதையோட்டத்தை சற்றே தளர்த்தியுள்ளனராம். பேனாவிஷன் எச்.டி. கேமரா மூலம் தயாராகும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

கிளைமாக்ஸ்...

கிளைமாக்ஸ்...

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் 50 அடி உயர அய்யனார் சிலை ஒன்று வருகிறது. அதைச் சுற்றிலும் 100 சிறிய சிலைகளை வைத்து பிரமாண்டமான செட் போட்டு சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளனராம்.

டூப் போடாமல்...

டூப் போடாமல்...

சண்டைக் காட்சியில் நடராஜ் டூப் போடாமல் நடித்துக் கொடுத்தாராம். ஸ்ண்ட் சோமுவின் பேரனான ஆக்ஷன் பிரகாஷ்தான் படத்தின் சண்டை மாஸ்டர் ஆவார். ஸ்டண்ட் சோமு, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்கு மாஸ்டராக இருந்தவர்.

எருமைவெட்டிப்பாளையம்...

எருமைவெட்டிப்பாளையம்...

எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட அழகிய கிராமங்களில் படம் வளர்ந்துள்ளது. மோடியின் தேர்தல் பிரசாரத்தை ஹாலோகிராம் முறையில் ஒளிப்பதிவு செய்து கொடுத்து அவரிடம் பாராட்டு பெற்றவரான ஒளிப்பதிவாவளர் யு.கே.செந்தில்குமார்தான் படத்தின் கேமாரமேன் ஆவார்.

அழகிய இசை...

அழகிய இசை...

தாஜ்நூரின் அழகிய இசை படத்திற்கு சிறப்பூட்டியுள்ளது. அப்பு மூவிஸ் சார்பாக உருவாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடத் தயாராகி வருகிறது மறைந்த ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

சிறப்பான படம்...

சிறப்பான படம்...

படத்தோட சிறப்பு என்ன என்று நட்டியிடம் கேட்டால், சதுரங்க வேட்டைக்குப் பிறகு நான் நடித்துள்ள சிறப்பான படம்தான் இது. இதில் மனதை தொடும் வசனம், ஆக்ஷன், துள்ளளான இளமை, துடிப்பான சண்டை, குளுமையான நடனம், பசுமையான ஒளிப்பதிவு, கலகலப்பான காமெடி, கச்சிதமான கவர்ச்சி என கதம் கதம் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிறார்.

எல்லாம் சரிதான் நட்டி சார்.. சதுரங்க வேட்டைக்கு முன்பே ஆரம்பித்து விட்ட இந்தப் படத்தை சீக்கிரமே திரைக்கு கொண்டு வரப் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X