Kanguva - கங்குவா எப்படி இருக்கும்?.. சீக்ரெட் பகிர்ந்த நட்டி.. ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: Kanguva (கங்குவா) கங்குவா படம் குறித்து நட்டி பேசியிருப்பதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி, கோவை சரளா, யோகிபாபு, நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

கங்குவா: படத்துக்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்ற அர்த்தம் என இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்திருக்கிறார். படமானது பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது. இதுவரை சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1000 கோடி ரூபாயை வசூலிக்க படக்குழு டார்கெட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்ன கதை: கங்குவா படம் முழுக்க முழுக்க பீரியட் படமாக உருவாகும் என கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முழுக்க முழுக்க வரலாறு படமாக கங்குவா அமையாது. அது ஒரு பகுதியாகத்தான் இருக்கும். மற்றபடி தற்காலத்தில் கோவாவில் நடைபெறும் சிறர்ந்த ஜனரஞ்சக படமாக இருக்கும் என கூறியிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள், ஒருவேளை படம் ஏழாம் அறிவு ஜானரில் வருமோ என சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர்.

க்ளிம்ப்ஸ்: சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் படத்த்ன் க்ளிம்ப்ஸ் காட்சிகளும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் அதனை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதுமட்டுமின்றி படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும், சூர்யாவின் கெட் அப் வேறு மாதிரி இருக்கிறது என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இரண்டு பாகங்களாக படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்டி பேட்டி: இந்நிலையில் கங்குவா படத்தில் நடித்திருக்கும் நட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், "நீங்கள் படத்தை பாருங்கள். கங்குவா படம் நிச்சயமாக உங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். படம் ரொம்பவே அற்புதமாக வந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டத்தை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி" என்றார்.


Click it and Unblock the Notifications











