twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிரட்டும் வில்லனாக நானி நடிக்கும் ‘வி‘…நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்!

    |

    ஹைதராபாத் : "ஆந்திரம், தெலங்கானா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப்படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது" என்கிறார் 'வி' திரைப்படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா.

    Recommended Video

    'V' ஒரு RARE SCRIPT | ACTOR SUDHEER BABU EXCLUSIVE | FILMIBEAT TAMIL

    அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய தெலுங்கு த்ரில்லர் திரைப்படமான 'வி', ட்ரெய்லர் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. தனித்துவமிக்க இந்த ட்ரெய்லரில் நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்களின் தாக்கமுள்ள நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்தப் படத்தின் இயக்குநர் மோகன கிருஷ்ணா, அற்புதமான நடிகர் நடிகையர் பட்டாளத்தைப் வைத்து, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த நடிப்பைப் பெற்று, அற்புதமான படைப்பைத் தந்துள்ளார். நடிகர்களின் சிறப்பைத் தாண்டி, தாய்லாந்தில் நடந்த அயல் நாட்டுப் படப்பிடிப்போடு சேர்த்து இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என்கிற சிறப்பம்சம் பெற்றுள்ள திரைப்படம் .

    அடேங்கப்பா..என்ன ஒரு வியூ...கவர்ச்சியில் தாராளம் காட்டிய பூமி பட நடிகை !அடேங்கப்பா..என்ன ஒரு வியூ...கவர்ச்சியில் தாராளம் காட்டிய பூமி பட நடிகை !

    சுவாரசியமாக

    சுவாரசியமாக

    'வி' திரைப்படத்தை ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமானதாக, பொழுதுபோக்குத் தரும் படைப்பாக மாற்ற பல விஷயங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன . ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக இந்தப் படத்தை மாற்ற காட்சி ரீதியாக ஒரு நிலையான அனுபவத்தைத் தர தாங்கள் முயற்சித்திருப்பதாக இயக்குநர் மோகன கிருஷ்ணா கூறியுள்ளார்.

    வழக்கமான காட்சி

    வழக்கமான காட்சி

    "பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்படும் திரைப்படங்களில் வழக்கமாக காட்சி ரீதியாக, வண்ணங்களில் வேறுபாடு இருக்கும். ஆனால் எங்கள் நோக்கமே வண்ணங்களில் அப்படி வேறுபாடு இல்லாமல் நிலையான ஒரு காட்சி அனுபவத்தைத்தருவது தான்.

    கவனமாக இருந்தோம்

    கவனமாக இருந்தோம்

    இரவோ, பகலோ, காட்சிகளின் வண்ணங்கள், அதன் தன்மை நிலையாக இருக்க வேண்டும் என்றே நினைத்தேன். எனவே அதற்காக உடை அலங்காரம், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினோம். எந்த மாதிரியான உடைகளை, நிறங்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். ஏனென்றால் உடைகள் அந்தந்த இடங்களுக்கு ஏற்றார் போலவும் இருக்க வேண்டும்.

    சீரான ஒரு காட்சி

    சீரான ஒரு காட்சி

    கோவா முழுக்க வெப்பமான இடம். மும்பை ஈரப்பதமும், வெப்பமும் நிறைந்த இடம், தாய்லாந்து வெப்ப மண்டலப் பகுதி, மணாலி அதிகக் குளிரான பகுதி. இவ்வளவு இடங்களில், வெவ்வேறு தட்பவெப்ப நிலையில் படம்பிடிக்கப் பட்டாலும் ரசிகர்களுக்கு சீரான ஒரு காட்சி அனுபவத்தை தர வேண்டும் என விரும்பினோம்.

    நீண்ட காலத்தில் நடக்கும் கதை

    நீண்ட காலத்தில் நடக்கும் கதை

    எல்லா தோற்றங்களையும் ஒரே மாதிரியான தன்மைக்குள் கொண்டு வருவது எங்களுக்கு சவாலாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் நினைத்த தன்மை கதைக்கும் ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது. ஒரு நீண்ட காலகட்டத்தில் நடக்கும் கதை இது. ரசிகர்கள் ஒரு நாவலைப் படித்ததைப் போல, அந்தந்த இடங்களை நேரடியாக பார்த்ததைப் போல உணர வேண்டும் என்று விரும்பினேன். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால் அது சாத்தியமானது" என்கிறார் மோகன கிருஷ்ணா.

    த்ரில்லர் திரைப்படம்

    த்ரில்லர் திரைப்படம்

    நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டமே 'வி' என்கிற சீட்டு நுனிக்கே ரசிகர்களை அழைத்து வரும் த்ரில்லர். காதல் த்ரில்லர் திரைப்படமான இதில், ஒரு காவல்துறை அதிகாரி, க்ரைம் எழுத்தாளர் ஒருவரைக் காதலிக்கிறார். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு கொலைகாரன், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு புதிர் போட்டு அதற்கு பதிலளிக்கச் சொல்லி சவால் விடுகிறான். முதல் முறையாக நானி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தில், அவரது வில்லத்தனத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர். நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதரி, ஜகபதி பாபு, வெண்ணெலா கிஷோர், நாசர் உள்ளிட்டோரும் 'வி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.செப்டம்பர் 5 முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் 'வி' ஸ்ட்ரீம் செய்யப்படும் . ஆசிரியர் தினத்தன்று வெளியாகும் இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டு என்பது தான் ரசிகர்களின் கருத்து.

    Read more about: nani நானி
    English summary
    Natural Star Nani played a negative role in 'V'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X