நவரசா ஆந்தாலஜி… ரசிகர்களின் மனம் கவர்ந்த‘கண்ணூஞ்சல்“ பாடல் ரிலீஸ் !
சென்னை : நவரசா ஆந்தாலஜி படத்தில் அதிதி பாலன் நடித்துள்ள பாயாசம் படத்திலிருந்து கண்ணூஞ்சல் பாடல் வெளியாகி உள்ளது.
கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன் பாடி உள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோ பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸில்
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள 'நவரசா' ஆந்தாலஜி தயாராகியுள்ளது. ஒன்பது பேர், ஒன்பது தனித்தனி கதைகளை இதற்காக இயக்குகின்றனர்.

9 தனித்தனி கதைகள்
நவரசா ஆந்தாலஜி. கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக்நரேன், வசந்த் சாய்,கார்த்திக்சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குநர்கள்9 கதைகளை இயக்கியுள்ளனர்.

முன்னணி நடிகர்கள்
கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அதிதி பாலன், ரிவித்விகா, யோபி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வஸந்த் சாய் இயக்கத்தில்
அருவருப்பு' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். இந்த பகுதிக்கு 'பாயாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகிணி, அருவி கதாநாயகி அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பெரும் வரவேற்பு
பாயாசம் படத்திலிருந்து கண்ணூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் என்ற நான்காவது பாடல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு பிரபாகரன் இசையமைத்துள்ளார். சுதா ரகுநாதன் பாடி உள்ள இப்பாடலுக்கு உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இணையத்தில் இந்த பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











