நவரசா ஆந்தாலஜியோட கேரக்டர்கள், டைரக்டர்கள் பெயர்கள் வெளியீடு... வைரலான சூர்யா புகைப்படம்
சென்னை : மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா கைவண்ணத்தில் நவரசா ஆந்தாலஜி வெப் சீரீஸ் உருவாகியுள்ளது.
கோபம், காதல் உள்ளிட்ட நவரசங்களை வெளிப்படுத்தும் வகையில் 9 இயக்குநர்கள் இந்த நவரசா சீரீசை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த 9 படங்களை இயக்கியுள்ள இயக்குநர்கள் மற்றும் அதில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர்கள் தகவல் வெளியீடு
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது நவரசா ஆந்தாலஜி வெப் சீரீஸ். கோபம், காதல் உள்ளிட்ட 9 ரசங்களை மையப்படுத்தி நவரசா உருவாகியுள்ளது. தற்போது இதன் 9 இயக்குநர்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா நாயகன்
ஆகஸ்ட் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ள இந்த சீரிசில் கௌதம் மேனன் காதலை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூர்யா மற்றும் ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இருக்கும்படியாக வெளியாகியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நாயகன்
தொடர்ந்து இயக்குநர் பிரியதர்ஷன் யோகிபாபு, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஹாஸ்யத்தையும், கருணையை மையமாக வைத்து பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆச்சர்யம் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரவிந்த்சுவாமி, பிரசன்னா, பூர்ணா நடித்துள்ளனர்.

கோபத்தை இயக்கிய அரவிந்த்சுவாமி
அரவிந்த்சுவாமி முதல் முறையாக இந்த சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கோபம் என்ற உணர்ச்சியை மையமாக வைத்து இவர் இயக்கியுள்ள படத்தில் ரித்விகா, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரித்விகா இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பயத்தை இயக்கிய ரதீந்திரன்
கார்த்திக் சுப்புராஜ் அமைதியையும், ரதீந்திரன் பயத்தையும் சர்ஜூன் தைரியத்தையும் வசந்த் அருவருப்பையும் மையமாக வைத்து படங்களை இயக்கியுள்ளனர். இந்த படங்களில் பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











