நவரசா பிஹைன்ட் தி சீன்ஸ் வீடியோவை வெளியிட்ட நடிகை பார்வதி!
சென்னை : இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகி வருகிறது நவரசா ஆந்தாலஜி திரைப்படம்.
9 முன்னணி இயக்குனர்கள் இயக்கும் இந்த படத்தின் ஒவ்வொரு பகுதியின் பெயர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் விவரங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
சமீபத்தில் வெளியாகி இருந்த அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய நடிகர்கள் நவரசத்தையும் காட்டியுள்ள ப்ரோமோவின் பிஹைன்ட் தி சீன்ஸ் வீடியோவை தற்போது நடிகை பார்வதி வெளியிட்டுள்ளார்.

9 கதைகளில்
இதுவரை தமிழில் ஆந்தாலஜி திரைப்படங்கள் 5 அல்லது 5 கதைகளைக் கொண்டு மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக 9 வித்தியாசமான கதைகளில் உருவாகிவரும் நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தை 9 முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மணிரத்னம் இந்த படத்தை தயாரித்து இருக்க தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

தேதியுடன் கூடிய ப்ரோமோ
சமீபத்தில் இதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டிருந்தது அதன்படி வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தேதியுடன் கூடிய அட்டகாசமான ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர்கள் அனைவரும் நவரசத்தையும் கட்டியிருந்த ஸ்லோ மோஷன் வீடியோ ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றிருந்தது.

நடிகை பார்வதி
பிரியதர்ஷன், வசந்த், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்தசாமி,பிஜோய் நம்பியார், கார்த்திக் நரேன், சர்ஜுன், ரதீந்திரன் என 9 இயக்குனர்கள் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் இன்மை என்ற கதையில் ரதீந்திரன் இயக்கத்தில் நடிகை பார்வதி நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார்.

மரியான் இயக்குனர் பரத்பாலா
ஆகஸ்ட் 6ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவின் பிஹைன்ட் தி சீன்ஸ் எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற வீடியோவை நடிகை பார்வதி வெளியிட்டுள்ளார். இதற்கு மரியான் பட இயக்குனர் பரத்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளதையும் பார்வதி மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











