நவரச நாயகன் கார்த்திக் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: நவரச நாயகன் கார்த்திக்கின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நேற்று நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்கின் ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே கார்த்திக்

ஹேப்பி பர்த்டே கார்த்திக்

1960ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சென்னையில் மறைந்த நடிகர் முத்துராமனுக்கு மகனாக பிறந்தார் கார்த்திக். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசனுக்கு நிகராக தனது நடிப்பால் கலக்கிய நடிகர் முத்துராமனை போலவே, நடிகர் கார்த்திக்கும் தனது நவரச நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

#HBDKarthik என்ற ஹாஷ்டேக்கை போட்டு நவரச நாயகனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து செய்திகளை பதிவிட்டு டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 1981ம் ஆண்டு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக், முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

பிறந்தநாள் விருந்து

பிறந்தநாள் விருந்து

நேற்று நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் முதியவர்களுக்கு உணவு வழங்கி பிறந்தநாள் விருந்து கொடுத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஏகப்பட்ட ஹிட் படங்கள்

ஏகப்பட்ட ஹிட் படங்கள்

அக்னி நட்சத்திரம், மெளன ராகம், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பொன்னுமணி, திருப்புமுனை, அமரன், கோபுர வாசலிலே, லக்கி மேன், சக்கரவர்த்தி, பூவரசன், கோகுலத்தில் சீதை, பிஸ்தா, ஹரிசந்திரா, அனேகன் என ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார் கார்த்திக்.

தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் ரசிகர்கள்

நடிகர் கார்த்தி மீண்டும் வில்லனாக அசத்தல் கம்பேக் கொடுத்தது நடிகர் தனுஷின் அனேகன் படத்தில் தான். இந்த வயதிலும் இளமை மாறாத கார்த்திக்கை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் மிரட்டி இருப்பார். அனேகன் போல இன்னும் பல படங்களில் கார்த்திக் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X