Karthik - நவரச நாயகன் கார்த்திக்கின் 2 மனைவிகளை பார்த்திருக்கிறீர்களா?.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் கார்த்திக். 80களின் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் தனது நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கட்டிப்போட்டவர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் நடிகராக வலம் வந்தாலும் தனது தந்தை போல் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்தச் சூழலில் கார்த்திக்கின் இரண்டு மனைவிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். முதல் படமே பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அந்தப் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகமான ராதாவுக்கும்; ஹீரோ கார்த்திக்கிற்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அலைகள் ஓய்வதில்லை ஹிட்டுக்கு பிறகு கார்த்திக்கிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

நவரச நாயகன்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட கார்த்தி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் பல வேரியேஷன்களை காண்பித்தார். தனது டயலாக் டெலிவிரி, உடல் மொழி என அனைத்திலும் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்ட அவர்தான் 80களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பெண் ரசிகைகளை கவர்வது ரொம்பவே கடினம். அதனை அசால்ட்டாக செய்தார் கார்த்திக்.
பெஸ்ட் மௌன ராகம்: கார்த்திக் எத்தனையோ படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் கெஸ்ட் ரோலில் வந்து ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளிய மௌன ராகம் படம் அவருக்கு எப்போதுமே பெஸ்ட். அதில் அவர் சொல்லும் சந்திரமௌலி மிஸ்டர் சந்திரமௌலி வசனம் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருப்பதை வைத்தே அவர் எவ்வளவு சிறந்த நடிகர் என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆக்ஷன் ஹீரோவும்கூட: சாக்லேட் பாய் இமேஜுக்குள் ஒரு நடிகர் விழுந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கியவரும் கார்த்திக்தான். அவர் நடித்த அமரன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் சாக்லேட் பாயிலிருந்து ரக்கட் பாய் மோடுக்கு மாறி நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார். ஒருபக்கம் ரொமாண்ட்டிக் படம் மறுபக்கம் ஆக்ஷன் படம் என கலக்கிக்கொண்டிருந்த அவர், உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி ஜானர் படங்களிலும் நடித்து அந்த ஏரியாவிலும் பெரும் ரவுண்டு வந்தவர்.
விமர்சனம்: எவ்வளவுக்கு எவ்வளவு அவர் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாரோ அதே அளவு அவர் மீது விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அதாவது கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர மாட்டார். வேண்டுமென்றே லேட் செய்வார் என்று கூறப்படுவதுண்டு. அதேசமயம் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் அவர் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரையும் பெற்றதுண்டு. காலம் செல்ல செல்ல கார்த்திக்கிற்கு பட வாய்ப்புகள் குறைய; தனது மகன் கௌதம் கார்த்திக்கை சினிமாவில் களமிறக்கினார். ஆனால் கௌதமுக்கு சொல்லிக்கொள்ளும்படி இதுவரை ஒரு வெற்றியும் இல்லை. இத்தனைக்கும் மணிரத்னத்தின் இயக்கத்தில்தான் கௌதம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மனைவிகள்: கார்த்திக் முதலில் ராகிணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் கௌதம் கார்த்திக். அவரைத் தவிர்த்து இன்னொரு மகனும் பிறந்தார். இந்தச் சூழலில் ராகிணியின் சகோதரி ரதி என்பவரையும் கார்த்திக் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு திரன் என்ற மகன் பிறந்தார்.
மனைவியின் சகோதரியையே திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் தனது மனதுக்கு சரி என்று பட்டதை செய்து யாரிடமும் அதை மறைக்காமல் ரதியுடன் மண வாழ்க்கை வாழ்ந்தார். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது தாய் ராகிணி மற்றும் சகோதரர்களுடன் இருக்கும் புகைப்படமும், கார்த்திக் ராகிணி மற்றும் ரதியுடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











