இந்த படம் சத்தியமா ஓடாதுன்னு கார்த்திக் சொன்னாரு.. ரமேஷ் கண்ணா பகிர்ந்த சீக்ரெட்!

சென்னை : தமிழ் சினிமாவிற்கு குடும்பங்கள் கொண்டாடும் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன்

கார்த்திக் நடிப்பில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது

இந்தநிலையில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் கண்டிப்பாக ஓடாது பிளாப் தான் ஆகும் என கார்த்திக் படப்பிடிப்பில் கூறியதாக ரமேஷ்கண்ணா தெரிவித்துள்ளார்.

வெள்ளி விழா படங்கள்

வெள்ளி விழா படங்கள்

புதுவசந்தம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்த திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. பெரும்பாலான விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வெள்ளி விழா கொண்டாடியது. மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்தது. குறிப்பாக விக்ரமன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவரது படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய மிக அழகான படங்களை கொடுத்து வந்த விக்ரமன் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் . கார்த்திக் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருப்பார். ரோஜா கதாநாயகியாக நடித்திருப்பார். மேலும் அஜித் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்வார். ரமேஷ் கண்ணன், மௌலி, சத்யா பிரியா,அம்பிகா, வையபுரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் நடித்திருப்பார். 1998ஆம் ஆண்டு வெளியான இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு நடிகர் வெங்கடேஷின் நடிப்பில் வெளியாகி அங்கும் சக்கைபோடு போட்டது.

இந்த படம் ஓடாது

இந்த படம் ஓடாது

காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்த ஃபீல் குட் படமாக வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் பணியாற்றிய போது கார்த்திக் ரமேஷ் கண்ணாவிடம் இந்த படம் ஓடாது என்றாராம். நான் நடித்த நந்தவனத் தெரு கதையைப் போல தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கதையும் உள்ளது. விக்ரமன் எந்த தைரியத்தில் இருந்த கதைய படமெடுக்கிறார் என்று தெரியல என ரமேஷ் கண்ணாவிடம் கூறியுள்ளார்.

ஆணித்தனமாக கூறிய விக்ரமன்

ஆணித்தனமாக கூறிய விக்ரமன்

ரமேஷ் கண்ணா கார்த்திக் சொன்னதை அப்படியே விக்ரமன் இடம் கூறியபோது, நான் இந்த படத்தை எடுக்கும் ஸ்டைலே வேறு, கட்டாயமாக இந்த படம் சூப்பர் டூப்பர் வெற்றிபெறும் என விக்ரமன் ஆணித்தனமாக கூறினாராம். விக்ரமன் சொன்னபடியே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 200 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று சாதனை படைத்தது தான் வரலாறு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X