FEFSI ஊழியர்களுக்கு 10 கோடி நிவாரணம் கொடுத்த நவரசா தயாரிப்பாளர்கள்!
சென்னை: மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் உருவாகி வரும் ஆந்தாலஜி திரைப்படம் "நவரசா".
பிரபல முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் கூட்டணியில் 9 கதைகளாக தயாராகி வருகிறது.
இந்த ஆந்தாலஜி திரைப்படம் நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது. ரிலிஸ் தேதி குறித்த தகவல்கள் ஏதும் இதுவரையில் வெளிவரவில்லை.

முன்னனி இயக்குனர்கள்
கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் என முன்னணி இயக்குனர்களின் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் நவரசா. மொத்தம் 9 கதைகளை கொண்ட இந்த படம் நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.

இசை, ஒளிப்பதிவு
சூரியா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், அதிதி பாலன், ரேவதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யா மேனன், ரித்விகா உள்ளிட்ட முன்னனி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந் வசந்தா உள்ளிட்டோர் இசை அமைத்துள்ளனர். சந்தோஷ் சிவன் மற்றும் சில ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பொருளாதார இழப்பு
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா தொற்று இன்று வரையிலும் பல பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. முடிவின்றி சென்று கொண்டிருக்கும் கொரோனா தொற்று தற்போது இரண்டாம் அலை என ஒரு புறம் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதனால் பல விதமான தொழில்கள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.
Recommended Video

Array
நவரசா படத்தின் தயாரிப்பாளர்களான மணிரத்னம் & ஜெயேந்திரா படத்தினை தயாரித்ததன் மூலம் அதில் கிடைத்த வருமானத்திலிருந்து ரூபாய் 10 கோடியை FEFSI ஊழியர்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளனர். இந்த செயலை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











