மாஸான லுக்கில் சூர்யா… நவரசா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !

சென்னை : நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் 9 இயக்குனர்கள் இணைந்து 9 குறும்படங்களை இயக்குகின்றனர்.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.

இதில் பணிபுரியும் இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவருமே சம்பளம் இன்றி பணியாற்றி வருகின்றனர். இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே

ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே

முன்பெல்லாம் ஆந்தாலஜி திரைப்படங்கள் ஒன்று இரண்டு படம் மட்டுமே வெளியாகும் ஆனால் கொரோனாவுக்கு பிறகு நிலைமையே வேறாக மாறி விட்டது. ஆந்தாலஜி திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.அந்த புகையில் புத்தம்புது காலை திரைப்படம் வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பாவக்கதைகள்

பாவக்கதைகள்

இதையடுத்து பெரிய இயக்குனர்களின் பார்வையும் ஆந்தாலஜி படங்களின் மீது திரும்பியது. அந்த வரிசையில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் உள்ளிட்ட இயக்குனர்கள் இணைந்து பாவக்கதைகள் திரைப்படத்தை வெளியிட்டனர். இப்படம் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

தற்போது 9 இயக்குனர்கள் இணைந்து நவரசா என்ற ஆந்தலாஜி திரைப்படத்தை இயக்கி வருகின்றனர். இதில், சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த்சாமி, பாபிசிம்ஹா, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், நித்யா மேனன், அம்மு அபிராமி,ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

சூர்யா மாஸ் லுக்

சூர்யா மாஸ் லுக்

வாரணம் ஆயிரம், காக்கா காக்கா என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த கௌதம் மேனன் மற்றும் சூர்யா கூட்டணி மீண்டும் இதில் இணைந்துள்ளது. கமலும் காதம்பரியும் என இவர்களின் எபிசோடுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புத்தளம் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவின் லுக் செம மாஸாக உள்ளது.சூர்யாவின இந்த லுக் ரசிகர்களை குதுகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X