தீபாவளி பேஷன் ஷோ - ஒய்யார நடையில் கலக்கிய ஆண்ட்ரியா
சென்னை: நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஃபேஷன் கண்காட்சி ஒன்று நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா உள்பட பல மாடல் அழகிகள் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தனர் மாடல் அழகிகள்.
ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணி பாடகியாக திரையுலகிற்குள் அறிமுகமாகி பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வருபம், அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதோடு, திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பதோடு, சிறந்த பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டில் வெளிவந்த அந்நியன் படத்தில் இவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலும், மதராச பட்டினம் படத்தில் இடம் பெற்ற பூக்கள் பூக்கும் தருணம், வானம் படத்தில் இடம் பெற்ற நோ மணி நோ ஹனி போன்ற பாடல்கள் இளைஞர்களிடையே வெகு பிரபலம்.
ஆண்ட்ரியா படங்களில் நடிப்பு, பின்னணி பாடுவதோடு மாடலிங்கும் செய்து வருகிறார். தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி சீசன் என்பதால் நடிகைகளில் பெரும்பாலானோர், படங்களில் நடிப்பதோடு, ஜவுளிக்கடைகளின் விளம்பர படங்களில் நடிப்பதோடு, ஆடைகள் கண்காட்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தீபாவளி நெருங்கி வரும் சூழலில் ஒரு ஆடைகள் கண்காட்சி நிகழ்ச்சி ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷல் கலெக்ஷன் ஆடைகள் புதிய நவீன டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அந்த நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஃபேஷன் கண்காட்சி ஒன்று நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா மற்றும் பல மாடல் அழகிகள் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தனர் மாடல் அழகிகள்.
இந்த கண்காட்சியில் இடம் பெற்ற அனைத்து ஆடைகளும் மிகவும் ட்ரெண்டியாகவும், ஸ்டைலாகவும் இருந்தன.


Click it and Unblock the Notifications











