ரஜினி வீட்ல நவராத்திரி விசேஷம்.. ஆட்டம் பாட்டம் அரட்டை என களைகட்டிய வீடு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு பலரும் கொலு வைத்து இறை வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். சில பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
பலரும் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர். திரை நட்சத்திரங்களும் தங்களின் வீடுகளில் கொலு வைத்து மூன்று தேவிகளையும் வழிபட்டு நவராத்திரியை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி வீட்டில் நவராத்திரி
இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரஜினிகாந்தின் மகள்களான சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

6வது நாள் கொண்டாட்டம்
இதற்காக தங்களின் சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தாவையும் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியான வந்தனாவையும் அவர்கள் நவராத்தியின் 6வது நாளில் தங்களின் வீட்டிற்கு அழைத்து செலிபிரேட் செய்துள்ளனர்.

வரவேற்பு
நான்கு பேரும் கண்கவர் பட்டுப்புடவையில் மிகவும் டிரெடிஷ்னலாகவும் தோன்றினர். நவராத்திரி விழாவில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்த பிரித்தாவையும் வந்தனாவையும் நடிகர் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் வரவேற்றனர்.

களைக்கட்டிய ரஜினி வீடு
நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ரஜினியின் வீட்டிற்கு வந்த பிரித்தா வந்தனா ஆகியோர் ரஜினியுடனும் லதா ரஜனிகாந்துடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











