twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவரசாவின் ‘ப்ராஜெக்ட் அக்னி‘ முழு நீள திரைப்படமாகிறது!

    |

    சென்னை : ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியான நவசரா பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    தோட்டத்தில் சிக்கிய கர்ப்பிணி உடும்பு.. சிம்புவின் அம்மா செய்த காரியம்.. குவியும் பாராட்டு! தோட்டத்தில் சிக்கிய கர்ப்பிணி உடும்பு.. சிம்புவின் அம்மா செய்த காரியம்.. குவியும் பாராட்டு!

    இதில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ப்ராஜெக்ட் அக்னி குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அப்படம் முழு நீள திரைப்படமாக உருவாக உள்ளது.

    9 குறும்படங்கள்

    9 குறும்படங்கள்

    கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த் சாய்,கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குனர்கள், கித்தார் கம்பி மேலே நின்று,சம்மன் ஆஃப் 92,பீஸ், இன்மை, துணிந்த பின், ப்ராஜெக்ட் அக்னி, ரௌத்திரம், எதிரி, பாயாசம் என 9 குறும்படங்களை உருவாகி உள்ளனர்.

    9 குணாதிசயங்கள்

    9 குணாதிசயங்கள்

    கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அதிதி பாலன், ரிவித்விகா, யோபி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    எதிரி

    எதிரி

    விஜய்சேதுபதி நடித்துள்ள குறும்படத்திற்கு எதிரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஜய்சேதுபதி, ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை பெஜோய் நம்பியார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மதன்கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

    சம்மர் ஆஃப்

    சம்மர் ஆஃப்

    9 குணாதிசயங்களில் நகைச்சுவை பகுதியாக சம்மர் ஆஃப் 92 குறும்படம் உருவாகி உள்ளது. இதை ப்ரியதர்ஷன் இயக்கி உள்ளார். இதில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் எத்தனை சிறப்பான, இயல்பான நகைச்சுவை திரைப்படங்களைத் தந்த இவர், ஆந்தலாஜியில் மிகவும் மோசமான படைப்பை கொடுத்திருக்கிறார் என்ற கருத்து பரவி வருகிறது.

    பாயாசம்

    பாயாசம்

    அருவி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிதி பாலன் இதில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பாயாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன். செல்ஃபி கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அமைதி படத்தில், இதில் பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ரௌத்திரம்

    ரௌத்திரம்

    அர்விந்த் சுவாமி இயக்கி உள்ள திரைப்படம் ரௌத்திரம். இத்திரைப்படத்தில் ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக் , கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். பயத்தை உணர்த்தும் இன்மை என்ற குறும்படம் படத்தில் சித்தார்த்தின் நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

    கிடார் கம்பியின் மேலே நின்று

    கிடார் கம்பியின் மேலே நின்று

    கௌதம் வாசுதேவ் மேனன், நவரசா பகுதியில் கிடார் கம்பியின் மேலே நின்று என்ற காதல் கதையை உருவாக்கி உள்ளார். இதில், சூர்யா ப்ரயா ரோஸ் மார்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். துணிந்த பின்,படத்தில் அதர்வா, அஞ்சலி கிஷார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு குறும்படமும் பல கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    ப்ராஜக்ட் அக்னி

    ப்ராஜக்ட் அக்னி

    ப்ராஜக்ட் அக்னி என்ற குறும்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கினார். இதில், அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா இதில் நடித்துள்ளனர். நனவுலகம், கனவுலகம், டைம் டிராவல் என்று பல விஷயத்தை பிரமிப்பூட்டும் வகையில் கார்த்திக் நரேன் கொடுத்திருக்கிறார். மனித வாழ்க்கை என்பது ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம், ஆழ்மனதின் மூலம் காலத்தை தாண்டி பயணம் செய்ய முடியும் என்று அழகாக காட்சிப்படுத்தி கூறியிருந்தார்.

    முழுநீள படமாக

    முழுநீள படமாக

    அனைவரின் பாராட்டை பெற்ற ப்ராஜெக்ட் அக்னி குறும்படம் முழு நீள திரைப்படமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். மேலும், இந்த திரைப்படத்தை முழு நீள திரைப்படமாக எடுக்கும் படியும் பலரும் இணையத்தின் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்தனர்.

    மனமார்ந்த நன்றி

    மனமார்ந்த நன்றி

    இந்நிலையில், ப்ராஜெக்ட் அக்னிக்கு மாபெரும் வரவேற்பை அளித்த ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்ட கார்த்திக் நரேன், விஷ்ணு, கிருஷ்ணா, கல்கி ஆகியோரின் பயணம் இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ப்ராஜெக்ட் அக்னி குறும்படத்தை முழு நீள படமாக இயக்க உள்ளதாகவும், அதைத்தான் நாசூக்காக இப்படி கூறியுள்ளார் என்றும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

    English summary
    Project Agni is one of the best shorts of the Navarasa anthology on Netflix. Karthick Naren said that the journey of the three characters of Project Agni has just begun.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X