ஆத்தா வந்துட்டாடா.. மொட்டை தாத்தா வயித்துலயே மிதிச்ச அர்ச்சனா.. நவராத்திரி நாடகம் வேற லெவல்!

சென்னை: நவராத்திரியின் கடைசி நாளும், விஜயதசமி பண்டிகையுமான இன்று பிக் பாஸ் வீட்டில் வேற லெவல் கொண்டாட்டங்கள் களை கட்டின.

நகரத்தார் பிக் பாஸ் நிகழ்ச்சியே ட்ரோல் பண்ணி டிராமா போட்ட நிலையில், கிராமத்தார் நவராத்திரி ஸ்பெஷல் அசுர வதம் நாடகம் போட்டு நடித்து மிரட்டிட்டாங்க.

அர்ச்சனா அக்கா மிதிக்கிறதுக்கு தன்னோட வயித்தையே தந்த சுரேஷ் தாத்தா வேற லெவல்.

ரம்யாவின் பாஸ் அம்மா

ரம்யாவின் பாஸ் அம்மா

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தை பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக ஹவுஸ்மேட்ஸ் அமர்க்களப்படுத்தி கொண்டாடினர். ஆளுக்கொரு கொலு பொம்மை கொடுக்கப்பட்ட நிலையில், அவற்றுக்கு அழகாக வண்ணம் இட்டு கொலு படியில் வைத்தனர். ரம்யா பாண்டியன் பாசமா பாஸ் அம்மான்னு தன்னோட பொம்மைக்கு பெயரே வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு போட்டிகள்

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் சமையல் போட்டி, ஏழு கல் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என பிக் பாஸ் வீடே ரொம்ப கலர்ஃபுல்லா களை கட்டியது. ஒருத்தர் போட்டோவை ஒருத்தர் எரிச்சவங்களா இப்படி ஒன்று கூடி கொண்டாடுறாங்க என பார்க்கும் போதே நாடகத் தன்மை வெளிப்படுகிறது.

பிக் பாஸ் நாடகம்

பிக் பாஸ் நாடகம்

சனம் ஷெட்டி, சோமசேகர், பாலாஜி இணைந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியையே ட்ரோல் பண்ணி நாடகம் போட்டு நடித்தனர். சனம் ஷெட்டி இந்த முறை நல்லாவே பர்ஃபார்மன்ஸ் பண்ணாங்க, பிக் பாஸ் வாயில் பேசி சோமசேகர் பிக் பாஸ் போட்டியாளர்களை நல்லாவே சிரிக்க வச்சிட்டார்.

நவராத்திரி நாடகம்

நவராத்திரி நாடகம்

சமையல் போட்டி, ஏழு கல் விளையாட்டு போட்டி என நகரத்தார் வெற்றி பெற்று வந்த நிலையில், கடைசியாக நவராத்திரி நாடகம் போட்டு கிராமத்தார் வேற லெவல் வெறித்தனத்தை காட்டி விட்டனர். அதிலும், மொட்டை தல சுரேஷ் மற்றும் அர்ச்சனா அக்காவும் நடிப்பில் மிரட்டிட்டாங்க

சரஸ்வதி சபதம்

சரஸ்வதி சபதம்

என்னடா பிக் பாஸ் வீட்டில் சரஸ்வதி சபதம் படம் போட்டுடீங்க என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு ரியோவை நாரதராகவும், அர்ச்சனாவை பார்வதியாகவும், சம்யுக்தாவை லக்‌ஷ்மியாகவும், கேபியை சரஸ்வதியாகவும், ஆரியை சிவனாகவும் மொட்டை தல சுரேஷை இதிலும் அரக்கனாக போட்டு அசத்திட்டாங்க..

சுரேஷ் வயித்துல மிதிச்ச அர்ச்சனா

சுரேஷ் வயித்துல மிதிச்ச அர்ச்சனா

லக்‌ஷ்மி, சரஸ்வதி, பார்வதி மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து விஜயதசமி அன்னைக்கு அசுரனை அழிக்கும் காட்சியில் அர்ச்சனா அக்கா மஞ்சள் எல்லாம் பூசிக் கொண்டு ஆத்தாவாகவே மாறிவிட்டார். மேலும், அரக்கனாக அட்டகாசம் பண்ண சுரேஷை வதம் செய்து வயித்துலயே மிதிச்சு மிரட்டிட்டாங்க, அந்த அளவுக்கு நடித்த சுரேஷுக்கும் பாராட்டுக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X