‘தமிழர்களின் பகுத்தறிவு’.. வீடியோ வெளியிட்டு மூடர்கூடம் நவீனிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி!

பகுத்தறிவு என்பது நாத்திகம் அல்ல' என ஆர்.ஜே பாலாஜி வெளியிட்ட வீடியோக்கு மூடர்கூடம் நவீன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: எல்.கே.ஜி. படக் காட்சி தொடர்பாக மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் எல்.கே.ஜி. சமகால அரசியலை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட அப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றுள்ளது.

அரசியல் தலைவர்கள் பலரையும் படத்தில் கிண்டல் செய்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் இப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியாக எதுவும் நடக்கவில்லை. தேர்தல் நேரத்தில் நமக்கேன் வம்பு என கட்சிக்காரர்கள் ஒதுங்கி விட்டனர் போலும்.

புதிய வீடியோ:

இந்நிலையில், நேற்று அப்படத்தின் காட்சி ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. அதில் பகுத்தறிவாதிகளை கலாய்க்கும் விதமாக, ‘வீட்டுக்குள் கடவுளை கும்பிட்டாலும், வெளியே பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களைக் கும்பிடுவதுதான் பகுத்தறிவு' என வசனங்கள் உள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பகுத்தறிவு:

இந்த வீடியோ தொடர்பாக மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் தனது டிவிட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எல்கேஜி பட வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால், வீட்டுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாய் இருப்பதல்ல எங்கள் தமிழகத்தின் பகுத்தறிவு.

பெரியார்வாதிகள்:

பெரியார்வாதிகள்:

ஆத்திகரே அதிகம் இருக்கும் இம்மண்ணில் சாஸ்திரம் கூறும் மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு. 95 சதவிகித பெரியார்வாதிகள் ஆத்திகர்களே" எனத் தெரிவித்துள்ளார். நவீனின் இந்தப் பதிவிற்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சையில் சிக்கிய ஆர்.ஜே.பாலாஜி:

சர்ச்சையில் சிக்கிய ஆர்.ஜே.பாலாஜி:

படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், தேவையில்லாமல் இப்படி ஒரு காட்சியை டிவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. ஒருவேளை இதுவும் ஒரு வகை நெகடிவ் புரோமோசன் வேலையாகக் கூட இருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X