நித்யானந்தா வீடியோவை பார்த்து நவீனுக்கு தலைவலியே வந்திருச்சாம்
சென்னை: நித்யானந்தாவின் வீடியோவை பார்த்த பிறகு தலைவலி வந்துவிட்டதாக இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
தலைவலிக்கு என்ன செய்ய வேண்டும் என்று நித்யானந்தா எளிய வழியில் விளக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோ இயக்குநரும், நடிகருமான நவீன் கண்ணில் பட்டது.

சரி, நித்யானந்தா என்ன தான் சொல்கிறார் என்பதை பார்த்த நவீனுக்கு தலைவலியே வந்துவிட்டது.
அப்பா சாமி. நல்லாயிருந்த தல இப்பதாண்டா வலிக்க ஆரமிச்சிருக்கு. சாரிடான் வாங்க போயிட்டிருக்கேன் என்று நித்யானந்தா வீடியோ குறித்து ட்வீட் செய்துள்ளார் நவீன். நீங்களும் வீடியோவை பார்த்துவிட்டு தலைவலி போனதா இல்லை வந்ததா என்பதை தாராளமாக கமெண்ட் பகுதியில் தெரிவிக்கலாம்.
நவீனின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
வீடியோவை பார்க்க பார்க்கத் தான் தலைவலி அதிகம் ஆகிறது. அண்ணா, வீடியோவை பார்த்து தலைவலி போயிங், தலசுத்து கம்மிங். இதற்கு தலைவலியே பரவாயில்லை போன்று. நித்யானந்தா சொல்வதை புரிந்து கொள்ள நம்மால் முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலரோ, உங்களை யார் அந்த வீடியோவை எல்லாம் பார்க்கச் சொன்னது தாவூத் பாய் என்று கேட்டுள்ளனர். மேலும் சிலரோ நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி, சங்கவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கொளஞ்சி படம் அருமை, தொடர்ந்து இது போன்ற படங்களை அளிக்க வேண்டும் என்று பாராட்டி, கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











