twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன்

    By Siva
    |

    சென்னை: கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு என்று மூடர்கூடம் நவீன் தெரிவித்துள்ளார்.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் திமுக தலைவர் கருணாநிதி. 2006ம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்தார்.

    Naveen is all praise for Karunanidhi

    அவரின் சட்டத்திற்கு பிரமாணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

    கருணாநிதி மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் பல கால கனவு நிறைவேறியுள்ளது. இது குறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    பிராமணரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விலகாமலிருக்க விரும்புகிறேன். #Karunanidhi என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Moodarkoodam director Naveen has appreciated the appointment of a non brahmin as a temple priest.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X