“காலில் விழுவது ஓபிஎஸ்க்கு புதிதல்லவே”.. வருத்தம் தெரிவிக்க மறுக்கும் ‘மூடர்கூடம்’ நவீன்!
துணை முதல்வருக்கு எதிரான ட்வீட்: வருத்தம் தெரிவிக்க மறுத்த மூடர்கூடம் நவீன்!
சென்னை: துணை முதல்வர் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என மூடர்கூடம் இயக்குனர் நவீன் ட்வீட் செய்துள்ளார்.
மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நவீன். இவர் இப்போது அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக நவீன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் நவீன். சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டை வன்மையாக கண்டித்திருந்தார். இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் நவீன் துணை முதல்வர் ஓபிஎஸ் சாஷ்டாங்கமாக பிரதமரின் காலில் விழுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ள நவீன், "துணை முதல்வர் சாஷ்டாங்கமாக குனிந்து வணங்கிய புகைப்படம் போட்டோஷாப் செய்தது என்பதால் டெலிட் செய்தேன். ஆனால் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. அடிமைபோல் குனிந்திருப்பது அவர்தான் என்றாலும், குனிவதும் காலில் விழுவதும் புதிதிதில்லை என்பதாலும்"


Click it and Unblock the Notifications











