அச்சச்சோ.. அனுஷ்கா ஜோடிக்கு இப்படி ஆகிடுச்சே.. நடக்கக் கூட முடியாத நிலையில் நவீன் பொலிஷெட்டி!

ஹைதராபாத்: 'ஜதி ரத்னலு', 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நவீன் பொலிஷெட்டிக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக அவரே உருக்கமான போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

34 வயதே ஆகும் டோலிவுட்டின் இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டிக்கு ஜதி ரத்னலு படத்திற்கு பிறகு தென்னிந்தியா முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். சில மாதங்கள் தனக்கு ஓய்வு தேவை என்றும் விரைவில் மீண்டும் நலம் பெற்று நடிக்க வருவேன் என்றும் நவீன் பொலிஷெட்டி கூறியுள்ளார்.

Naveen Polishetty accident Anushka Shetty

மேலும், தன்னை பற்றிய வதந்திகள் ஏதும் வந்தால் நம்ப வேண்டாம் என்றும் அனைத்து அப்டேட்களையும் நானே கொடுக்கிறேன் என அவர் சொல்லியிருப்பது ஏதோ உள்குத்து இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

நவீன் பொலிஷெட்டி: எப்போதுமே சிரித்த முகத்துடனே படங்களில் மட்டுமின்றி சினிமா விழாக்களிலும் ரசிகர்களை சந்திக்கும் போது தென்படுபவர் தான் நவீன் பொலிஷெட்டி. 1990ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த நவீன் பொலிஷெட்டி 2012ம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார். டி ஃபார் டோப்பிடி உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், 2019ம் ஆண்டு வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா படத்தில் தான் அவருக்கு லீடு ரோல் கிடைத்தது.

கல்கி இயக்குநர் தயாரிப்பில்: அடுத்து சிக்கோரே எனும் இந்தி படத்தில் நடித்த நவீன் பொலிஷெட்டி 2021ம் ஆண்டு கல்கி பட இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியான ஜதி ரத்னலு படத்தில் நடித்து பிரபலமானார். சிவகார்த்திகேயனை வைத்து பிரின்ஸ் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் அனுதீப் கே.வி. தான் அந்த படத்தை இயக்கினார்.

Naveen Polishetty accident Anushka Shetty

அனுஷ்காவுக்கு ஜோடி: ஜவான் படத்துக்கு போட்டியாக கடந்த ஆண்டு மீண்டும் அனுஷ்கா கம்பேக் கொடுத்த படத்திலும் இவர் தான் ஹீரோயின். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என நவீன் பொலிஷெட்டி பெயர் டைட்டிலில் வரும்படி வெளியான அந்த படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்னர் அனங்கனங்கா ஒக்க ராஜு படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படியொரு விபத்து நேர்ந்துள்ளது.

கை, கால் முறிவு: வலது கரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் நடக்கக் கூட முடியவில்லை என திடீரென நவீன் பொலிஷெட்டி பதிவிட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூடிய சீக்கிரமே குணமாகி வருவேன் என்றும் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Naveen Polishetty accident Anushka Shetty

ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்: அவரது அறிக்கையை பார்த்த ப்ளூ சட்டை மாறன் பிரில்லியண்ட் ஆக்டர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என ட்வீட் போட்டுள்ளார். நவீன் பொலிஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் விரைவில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X