பச்சை நிறச் சேலையில் முன்னாள் ஹீரோயினின் ஹோம்லி லுக் போட்டோஸ்.. அப்படி புகழும் நெட்டிசன்ஸ்!
கொச்சி: பிரபல நடிகை பச்சை நிற புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை நெட்டிசன்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
பிரபல முன்னாள் ஹீரோயின், நவ்யா நாயர். தமிழ், மலையாளம், கன்னடத்தில், பல படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடனக் கலைஞருமான நடிகை நவ்யா நாயர், பிரபல இயக்குனர் கே.மதுவின் உறவினர்.

சின்னஞ்சிறு கிளியே
தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் பாடல்களை கொண்டு, சின்னஞ்சிறு கிளியே என்ற நடன வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நடிக்கவில்லை
கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விடைபெற்றார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் 8 வருடத்துக்க்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நவ்யா .

மஞ்சு வாரியர்
அவர் நடிக்கும் படத்துக்கு ஒருத்தீ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். நவ்யா நாயரின் கம்பேக் படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டியும் நடிகை மஞ்சு வாரியரும் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது வரவேற்பை பெற்றது.

அப்படி புகழ்ச்சி
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் நவ்யா நாயர், இப்போது புதிய போட்டோஸை வெளியிட்டுள்ளார். பச்சை நிறப் புடவையில் ஹோம்லி லுக்கில் அவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸை ரசிகர்கள் அப்படி புகழ்ந்துள்ளனர்.

விற்க மாட்டேன்
இதற்கு கேப்ஷனாக, கலீல் ஜிப்ரானின் கவிதையை குறிப்பிட்டுள்ளார். 'என் நாட்களை தங்கத்திற்காக விற்க மாட்டேன் என்பதால், அவர்கள் என்னை மோசமாக கருதுகிறார்கள். என் நாட்களுக்கு மதிப்பு இருப்பதாக நினைப்பதால் அவர்கள் என்னை பைத்தியம் போல கருதுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தம்புராட்டி மாதிரி
சில நெட்டிசன்ஸ், பச்சைக் கலர் உங்களுக்குப் பச்சக்குன்னு இருக்குது நவ்யா சேச்சி என்றும், உங்களுக்கு சேலைதான் ரொம்ப அழகா இருக்கு என்றும் கூறியுள்ளனர். சிலர், தம்புராட்டி மாதிரி இருக்கீங்க என்றும் இன்னும், அப்ப பார்த்த மாதிரி அப்படியே இருக்கீங்களே என்று சிலர் ஆச்சரியமாகக் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











