கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு முதல் நாள் ஷூட்டிங்.. மீண்டும் மேக்கப் போட்ட பிரபல நடிகை மகிழ்ச்சி!
கொச்சி: லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து படப்பிடிப்பில் இறங்கியுள்ளார், பிரபல ஹீரோயின்.
தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை நவ்யா நாயர்.
சிறந்த நடனக் கலைஞரான அவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிக்கவில்லை
கடந்த 2010 ம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆன நவ்யா, பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விடைபெற்றார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் 8 வருடத்துக்க்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நவ்யா .

மஞ்சு வாரியர்
அவர் நடிக்கும் படத்துக்கு ஒருத்தீ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். நவ்யா நாயரின் கம்பேக் படமான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டியும் நடிகை மஞ்சு வாரியரும் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது வரவேற்பை பெற்றது.

லாக்டவுன்
தொடர்ந்து நடந்து வந்த இதன் ஷூட்டிங், கொரோனா லாக்டவுன் காரணமாகத் தடைபட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் சில மாநிலங்களில் சினிமா படப்பிடிப்பை தொடர, சில விதிமுறைகளை வகுத்து அந்தந்த மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன.

முதல் ஷூட்டிங்
இந்நிலையில் நடிகை நவ்யா நாயர், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் லாக்டவுனுக்கு பிறகு முதல் நாள் ஷூட்டிங் என்று குறிப்பிட்டுள்ளார். இது அவர் நடிக்கும் ஒருத்தீ படத்துக்கான ஷூட்டிங்கா, இல்லை விளம்பர படப்பிடிப்பா என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











