திருமணமான விஷயத்தை மறைத்து என்னுடன் தொடர்பு வைத்தார்: நடிகர் மீது நடிகை புகார்
மும்பை: தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து நவாஸ் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக நடிகை நிஹாரிகா சிங் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தனது வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் தன்னுடன் நடித்த நிஹாரிகா சிங்குடன் உறவு கொண்டது, ஒன்றரை ஆண்டுகள் அவருடன் இருந்தது குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.
இதை பார்த்த நிஹாரிகா பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நவாஸ்
2009ம் ஆண்டு மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது எனக்கும், நவாஸுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.

வேடிக்கை
நான் அரைகுறை ஆடையில் வீடு முழுக்க மெழுகுவர்த்தி ஏற்றி அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறுவது எல்லாம் சிரிப்பாக உள்ளது.

கிராமம்
நவாஸுக்கு திருமணமான விஷயம் எனக்கு அப்போது தெரியாது. பின்னர் தான் அவரின் மனைவி கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது. அவர் எந்த கேள்விக்கும் சரியான பதில் அளிக்க மாட்டார். அதனால் அவருக்கு திருமணமானதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மவுசு
நவாஸ் தனது புத்தகத்தை விற்க ஒரு பெண்ணை அவமதித்து ஏதேதா எழுதியுள்ளார். நல்ல கற்பனை கதைகளை எழுதியுள்ளார். அவர் என்னிடம் அனுமதி வாங்குவதை விடுங்க அவர் எழுதியதே எனக்கு தெரியாது.

வாழ்த்து
நவாஸ் வெளிப்படையாகவே பேச மாட்டார். அதனால் தான் அவரை பிரிந்தேன். அவர் ஒரு நல்ல நடிகர். அவர் என்ன பேசியிருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றார் நிஹாரிகா சிங்.


Click it and Unblock the Notifications











