பேட்ட நடிகர் மீது பாலியல் புகார்… நடிகருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய இந்தி நடிகை!
நடிகர் நவாஸுதின் சித்திக்குக்கு ஆதராவாக கிளம்பியுள்ளா குப்ரா சைத்
மும்பை: நவாஸுதின் சித்திக்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நடிகை குப்ரா சைத்.
பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நவாஸுதின் சித்திக். இவரின் மிரட்டும் நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நாடெங்கும் பரபரப்பாக பேசப்படும் மீடூ புகாரில் நவாஸுதின் சித்திக்கின் பெயரும் சிக்கியுள்ளது. அவருடைய முன்னாள் காதலியும், மிஸ் இந்தியா அழகியுமான நிகாரிகா சிங் பாலியல் குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.
நவாஸுதினுடன் திரைப்படத்தில் நடித்த காலத்தில் பலமுறை உடல் ரீதியான நெருக்கத்திற்கு அவர் முயற்சித்ததாகவும், அதிலிருந்து நிகாரிகா தப்பித்ததாகவும் கூறினார். மேலும் இதுபோன்ற விஷயங்களுக்கு உடன்படாததால் பலரிடமும் தன்னைப் பற்றி தான் ஒரு மோசமான நடிகை என்று நவாஸுதின் சித்திக் சொன்னதாக கேள்விப்பட்டதாகவும், அதனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை குப்ரா சைத், முறிந்துபோன உறவைப் பற்றி பேச மீடூவை காரணம் தேடுகிறார். நிகாரிகாவுக்கு கடினமான தருணங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அதற்கு மீடூவை ஆயுதமாக பயன்படுத்துவது சரியல்ல என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











