இயக்குனரின் அட்டூழியத்தை அவர் தட்டிக்கேட்கவில்லை: பேட்ட நடிகர் மீது நடிகை புகார்
Recommended Video

மும்பை: பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை பார்த்தும் பார்க்காதது போன்று இருந்தார் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி என்கிறார் நடிகை சித்ரங்கடா சிங்.
குஷால் நந்தி இயக்கிய பாபுமோஷாய் பந்தூக்பாஸ் படத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு வெளியேறினார் சித்ரங்கடா சிங். கதைக்கு தேவையில்லாத நிலையில் படுக்கையறை காட்சிகளில் நடிக்குமாறு கூறி இயக்குனர் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்தார் அவர்.
இந்நிலையில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள இந்த நேரத்தில் சித்ரங்கடா கூறியிருப்பதாவது,

சேலை
சேலையை அவிழ்த்துவிட்டு ஜாக்கெட்டின் ஊக்கை கழற்றிவிட்டு ஹீரோவான நவாசுத்தீன் சித்திக்கியின் மீது ஏறி அமர்ந்து என்னை நானே தடவ வேண்டும் என்று இயக்குனர் கூறினார். சேலையை அவிழ்ப்பதா, நான் உள்பாவாடை மட்டும் தானே போட்டிருக்கிறேன். முடியாது என்று எவ்வளவோ கூறியும் இயக்குனர் குஷால் கண்டுகொள்ளவில்லை.

நவாஸ்
என்னால் அப்படி நடிக்க முடியாது என்று கெஞ்சினேன். ரொம்ப சீன் போடாமல் சொன்னபடி செய்யுமாறு இயக்குனர் கூறினார். அந்த படுக்கையறை காட்சியில் நடிக்குமாறு என்னை மிரட்டினார்கள். அதை பார்த்து படக்குழுவில் சிலரே அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் நவாஸ் அதை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தார்.

வேடிக்கை
குஷால் நந்தி என்னிடம் வந்து இந்த காட்சியில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்றதும் அவர் சென்றுவிட்டார். நவாஸ் நினைத்திருந்தால் எனக்கு ஆதரவு அளித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. பலம் படைத்த ஆண்களே பாலியல் தொல்லைகளை தட்டிக் கேட்காமல் இருப்பது தான் தொல்லை கொடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.

மறக்க முடியவில்லை
2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை நான் மறக்க நினைக்கிறேன். ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. நடந்த உண்மையை பேசிய என் பெயரை தான் கெடுத்தார்கள். தவறு செய்த ஆண்கள் பயப்பட வேண்டும். மீ டூ இயக்கம் மேலும் தீவிரம் அடையும் என்று நம்புகிறேன் என்று சித்ரங்கடா சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











