லாக்டவுனில் சொந்த ஊருக்குச் சென்றதால்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ரஜினியின் 'பேட்ட' வில்லன்!
மும்பை: ரஜினியின் 'பேட்ட' பட வில்லன் நடிகர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர், நவாஸூதின் சித்திக். தேவ்டி, பீப்ளி லைவ், கஹானி, பாம்பே டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பயோபிக்கான தாக்கரே, மவுன்டேன் மேன் என்றழைக்கப்படும் மன்ஜியின் வாழ்க்கை கதை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார்.

'பேட்ட' வில்லன்
தமிழில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில், இவர் நடிப்பு பேசப்பட்டது. பல படவிழாக்களில் நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நவாஸுதின் சித்திக், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்கள்
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து வருகின்றனர். தினமும் ஒர்க் அவுட், சமையல் உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அது தொடர்பான போட்டோக்களையும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகை
இந்நிலையில் நடிகர் நவாஸூதின் சித்திக்கும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தார். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற் காக, மனைவி ஆலியா, மகள் ஷோரா, மகன், தாய் மற்றும் உறவினர்களுடன் உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு கடந்த 11 ஆம் தேதி சென்றார். இதற்காகச் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தார்.

பாதிப்பு இல்லை
அங்கு சென்று சேர்ந்ததும், சுகாதாரத் துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. அதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் 14 நாள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் நவாஸூதின் சித்திக் உட்பட அவர் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல் இப்போது தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











