Just In
- 17 min ago
'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்!
- 51 min ago
முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
- 11 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 12 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
Don't Miss!
- News
பெங்களூர், ஒசூர் நகரங்களில் கடும் பனிப்பொழிவு.. காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
- Automobiles
என்ன இப்படியாயிடுச்சு.. தாருக்கு குவியும் முன்பதிவுகளால் செய்வதறியாது நிற்கும் மஹிந்திரா! பாகங்கள் பற்றாக்குறை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்
மும்பை: நடிக்க வந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார் நவாசுத்தீன் சித்திக்கி.
பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். பாலிவுட்டில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து படிப்படியாக முன்னேறியவர் அவர்.
அவர் தனது தாக்கரே படத்தை விளம்பரப்படுத்துவதில் பிசியாக உள்ளார்.

நவாஸுத்தீன்
நவாஸுத்தீன் சித்திக்கி நடிகை அம்ரிதா ராவுடன் சேர்ந்து கபில் ஷர்மாவின் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தான் நடிக்க வந்த புதிதில் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டது குறித்து அவர் பேசினார். பணம் சம்பாதிக்க அவர் கொத்தமல்லி இலை விற்றது குறித்தும் தெரிவித்தார்.

பணம்
மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 200க்கு கொத்தமல்லி இலைகளை வாங்கினேன். அதை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் நிறம் மாறியதால் யாரும் வாங்கவில்லை. இது குறித்து மொத்த வியாபாரியிடம் கேட்டதற்கு, நிறம் மாறாமல் இருக்க அவ்வப்போது தண்ணீரை தெளித்திருக்க வேண்டும் என்றார். இதை அவர் முன்பே தெரிவிக்காததால் என் கையில் இருந்த கடைசி பணமும் போனது. இதையடுத்து டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது என்றார் நவாஸ்.

ஜூனியர் ஆர்டிஸ்ட்
நான் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ரூ. 4,000 சம்பாதித்தேன். ஜூனியர் ஆர்டிஸ்ட் கார்டு இல்லாததால் ரூ. 4 ஆயிரத்தில் ரூ. 2 ஆயிரத்தை ஒருங்கிணைப்பாளருக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மீதமுள்ள ரூ. 2 ஆயிரத்தில் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து ரூ. 1,800 செலவாகிவிட்டது. எஞ்சிய பணம் ரிக்ஷாவுக்கு போய்விட்டது. இறுதியில் மீண்டும் என் கையில் பணம் இல்லை என்று நவாஸ் தெரிவித்தார்.

நடிப்பு
தனது நடிப்புத் திறமையால் உயர்ந்துள்ள நவாஸ் சிவ சேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவாக நடித்துள்ளார். தாக்கரே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அவரின் கெரியரில் முக்கியமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.