விஜய்யின் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கும் ரஜினி பட வில்லன்? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: விஜய்யின் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் விஜயும் ஒருவர். விஜய்யின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துவிடும்.
கடைசியாக அவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்
அதனை தொடர்ந்து தற்போது தனது 65வது படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 65 படத்தை டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வில்லன் ரோலில்
தளபதி 65 படம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. அதாவது, தளபதி 65 படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ரஜினிக்கு வில்லனாக
தனித்துவமான நடிகரனா நவாசுதீன் சித்திக், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு நவாசுதீன் சித்திக் பேட்டி அளித்துள்ளார்.

இதுவரை பேசவில்லை
அப்போது, தளபதி 65 படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக பரவும் தகவல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய நவாசுதீன் சித்திக், தளபதி 65 படத்தில் வில்லன் ரோலில் நடிப்பது குறித்து படக்குழு இதுவரை தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என கூறியுள்ளார்.
Recommended Video

விரைவில் தகவல்
மேலும் தான் ஒரு டார்க் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறியுள்ளார் நவாசுதீன் சித்திக். இருப்பினும் படக்குழுவின் சாய்ஸாக நவாசுதீன் சித்திக் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் தளபதி 65ல் நவாசுதீன் சித்திக் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications