twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவை பார்த்து கத்துக்கோங்கப்பா.. பாலிவுட்டை பந்தாடிய நவாஸுதின் சித்திக்.. ஏன் தெரியுமா?

    |

    மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவையும் தென்னிந்தியர்களையும் பார்த்து பல விஷயங்களை பாலிவுட் சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என பேசியிருந்தது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான நடிகராக மாறியவர் நவாஸுதின் சித்திக்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

    டாணாக்காரன் படத்தின் ரியல் வெற்றி இதுதான்.. காவலர் பயிற்சி பள்ளிகளிலேயே திரையிட்டுருக்காங்க!டாணாக்காரன் படத்தின் ரியல் வெற்றி இதுதான்.. காவலர் பயிற்சி பள்ளிகளிலேயே திரையிட்டுருக்காங்க!

    மிரட்டலான நடிகர்

    மிரட்டலான நடிகர்

    அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் மிரட்டலாக நடித்த நவாஸுதின் சித்திக், பாலிவுட்டில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பட்லாபூர், மாஞ்சி தி மவுன்டெயின் மேன், ராமன் ராகவ் 2.0, மாண்டோ, தாக்கரே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

    சேக்ரட் கேம்ஸ்

    சேக்ரட் கேம்ஸ்

    நெட்பிளிக்ஸில் வெளியான சேக்ரட் கேம்ஸ் வெப்சீரிஸில் சைஃப் அலி கான் உடன் இணைந்து வேறலெவலில் மிரட்டி எடுத்திருப்பார். இவர் நடித்த படு ஆபாசமான காட்சிகள் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிப்புக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார் நவாஸுதின் சித்திக்.

    பேட்ட வில்லன்

    பேட்ட வில்லன்

    பாலிவுட்டில் அசத்தி வந்த இவரை, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்க அழைத்து வந்தார். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்த வில்லத்தனம் கோலிவுட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திலும் இவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இவருக்கு பதிலாக அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார்.

    தமிழர்களை பார்த்து கத்துக்கோங்க

    தமிழர்களை பார்த்து கத்துக்கோங்க

    சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் நவாஸுதின் சித்திக் ஆங்கிலம் பேசும் இந்தி நடிகர்களால் தான் பாலிவுட் சினிமா பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்றும் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் தங்கள் மொழியில் பேசி படம் நடிப்பதை பெருமையாக கருதுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

    தென்னிந்திய சினிமா மேல்

    தென்னிந்திய சினிமா மேல்

    தமிழ் சினிமா துறையினர் தமிழிலும், கன்னட திரையுலகினர் கன்னடத்திலும் பேசுவதை பெருமையாக நினைக்கின்றனர். அவர்களின் படங்கள் ஹிட் அடிக்க காரணமும் அது தான். தாய் மொழியை மறந்து விட்டு பாலிவுட் நடிகர்கள் ஆங்கிலத்தில் பேசி படம் நடித்தால், அந்த படங்கள் அனைத்து ரசிகர்களையும் சென்று சேராது எனக் கூறியுள்ளார். ஹீரோபன்டி 2 படத்தில் நடித்துள்ள நவாஸுதின் சித்திக் அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

    லஞ்சம் கொடுத்து ஏமாத்துறாங்க

    லஞ்சம் கொடுத்து ஏமாத்துறாங்க

    இந்தி படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சில நடிகர்கள் லஞ்சம் கொடுத்து தங்களது படம் ஹிட் என சொல்லி ஏமாத்துறாங்க என கடுமையாக சாடியுள்ளார். இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு 4 நண்பர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு காசு கொடுத்து இப்படி கிளப்பி விடுவதால் தான் பாலிவுட் தனது பழைய நிலையை இழந்து தவிக்கிறது என ரொம்பவே அப்செட்டாகி பேசி உள்ளார்.

    English summary
    Bollywood Actor Nawazuddin Siddiqui praises Tamil Actors and mocks English-speaking actors for attempting Hindi films
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X