நடிகையுடன் தொடர்பு, வெயிட்டருடன் ஒரு இரவு, தற்கொலை முயற்சி: நடிகரின் மறுபக்கம்

By Siva

Recommended Video

நடிகையுடன் தொடர்பு, வெயிட்டருடன் ஒரு இரவு, தற்கொலை முயற்சி-வீடியோ

மும்பை: தன்னுடன் நடித்த நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது, ஹோட்டலில் பணிபுரிந்த பெண்ணுடன் ஒரு இரவு இருந்தது பற்றி தெரிவித்துள்ளார் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி.

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது. அவரின் மனைவி அஞ்சலி, ஷோரா என்ற மகள், யானி என்ற மகன் உள்ளார். அவ்வளவு தான் பிறருக்கு தெரியும்.

இந்நிலையில் நவாஸ் தனது வாழ்க்கையை பற்றி ஆர்டினரி லைப் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது,

வீடு

வீடு

மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நிஹாரிகா சிங் என்னை தன் வீட்டிற்கு அழைத்தார். நானும் சென்றேன். கதவை அவர் திறந்தபோது வீடெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார்.

ஆசை

ஆசை

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிஹாரிகா மிகவும் அழகாக இருந்தார். உடனே அவரை நேராக படுக்கையறைக்கு அழைத்துச் சென்று உறவு வைத்துக் கொண்டோம். அதன் பிறகு அவருடன் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன்.

வெயிட்டர்

வெயிட்டர்

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றபோது உணவகத்திற்கு சென்றேன். அங்கு பணியாற்றிய பெண் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அந்த இரவு நாங்கள் ஒன்றாக இருந்தோம்.

திருமணம்

திருமணம்

நியூஜெர்சி நகரை சேர்ந்த யூத பெண்ணான சூசனை காதலித்தேன். அவர் மும்பை வந்து என்னுடன் வசித்தார். அவரை திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் அப்போது அவரின் சகோதரருக்கு விவாகரத்து நடந்ததால் சூசனுக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை.

சூசன்

சூசன்

விசா முடிந்ததால் சூசன் அமெரிக்கா திரும்பினார். அப்போது தான் நிஹாரிகாவுடன் தொடர்பு ஏற்பட்டது. நிஹாரிகா விஷயம் தெரிந்து சூசன் கெஞ்சினார், அழுதார்.

ரயில்

ரயில்

என் முதல் காதலியின் பெயர் சுனிதா. அந்த காதல் முறிந்ததை என்னால் தாங்க முடியவில்லை. அப்போது ரயில் நிலையத்திற்கு சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்தபோது ரயில் ஒன்று வந்தது. அந்த ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்ய நினைத்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன் என்று புத்தகத்தில் தெரிவித்துள்ளார் நவாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X