இது ரொம்ப பழசு.. அவரை தூண்டி விடுகிறார்கள்.. பாலியல் புகார் குறித்து பிரபல நடிகரின் சகோ விளக்கம்!
சென்னை: நடிகர் நவாசுதீனின் சகோதரர் மீது அவரது அண்ணன் மகள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் மற்றொரு சகோதரர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் நவாசுதீன் சித்திக்கின் பெயர் கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறது. அவரது இரண்டாவது மனைவியான ஆலியா சித்திக் அவரிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் அவர், தொடர்ந்து நவாசுதீன் சிச்திக்கின் குடும்பத்திற்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நவாசுதீன் சித்திக்கின் தம்பி மகள், அவரது மற்றொரு சகோதரர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.

பெரிதுப்படுத்தவில்லை..
தான் 9 வயதாக இருந்த போது தனக்கு தனது பெரியப்பாவான நவாசுதீன் சித்திக்கின் தம்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதுபற்றி தனது பெரியப்பாவான நவாசுதீன் சித்திக்கிடம் கூறிய போதும் அவர், இதை பெரிதுப்படுத்தவில்லை என்றும் கூறினார்.

அண்ணன் மகள்
இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் நவாசுதீன் சித்திக்கின் சகோதரர் ஷாமாஸ் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது, டேராடூனில் வசிக்கும் என் அண்ணன் மகள்தான் அவர்.

ஓடிப்போய்விட்டார்
மைனர் ஆன அவர் வீட்டை விட்டு ஓடிப்போய் எங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக என்னுடைய அண்ணன் டேராடூன் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலி சான்றிதழ்ககளை காண்பித்து தன்னை மேஜர் என நிரூபித்துள்ளார்.

முன்பு பேசவில்லை
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது பின்னர் அவர்கள் அந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.மேலும் என்னுடைய இளைய சகோதரர் மினாஸ் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதற்கு முன்பு அவர் நவாசுதீன் சித்திக் பற்றி எதுவும் பேசவில்லை.

யாரோ தூண்டிவிடுகிறார்கள்
ஆனால் இப்போது நவாஸ் பாய்யையும் அவர் ஈடுபடுத்தி பேசுகிறார். இந்த சர்ச்சையில் அவரையும் இழுக்குமாறு யாரோ அவரை தூண்டி விடுகிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜராகாததால் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் அந்த சிறுமிக்கும் அவரது கணவருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இழிவுப்படுத்தி..
ரூ .20000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் சிறுமி என்பதால் அவரது கணவர் மீது போக்ஸோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "நீங்கள் ஒருவரை இவ்வளவு இழிவுபடுத்துவது எப்படி? எங்களுக்கு 400 உறவினர்கள் உள்ளனர், எங்கள் கிராமத்தில் ஏதேனும் நடந்தால், நீங்கள் நவாஸ் பாயின் பெயரை எடுப்பீர்களா?
Recommended Video

சம்பந்தமும் இல்லை
அவரது பெயர் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இதில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு ஷாமாஸ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் லாக்டவுன் முடிந்த பிறகு இந்த பிரச்சனைகள் குறித்து சட்டப்படி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











