என் குழந்தையே இல்லை.. மனைவி மீது சந்தேகப்படும் நடிகர்.. மரபணு பரிசோதனைக்காக நீதிமன்றம் சென்ற மனைவி!
சென்னை : பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், தனது இரண்டாவது மகனை ஏற்க மறுத்து வருவதால், மரபணு சோதனைக்கு நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளார் ஆலியா சித்திக்.
நடிகர் நவாசுதீன் சித்திக் 1999 ஆம் ஆண்டு வெளியான 'sarfarosh' என்ற படத்தில் தீவரவாதி கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறைக்கு அறிமுகமானார்.
அதன் பின்னர் பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகர் நவாசுதீன் சித்திக்
நடிகர் நவாசுதீன் சித்திக் 2019ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபி சிம்ஹா, சிம்ரன், விஜய் சேதுபதி, சசிக்குமார், மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் முதன் முறையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்.

கணவருக்காக மதம் மாறினார்
நடிகர் நவாசுதீன் சித்திக் 2009ம் ஆண்டு அஞ்சனா கிஷோர் பாண்டே என்ற இந்து பெண்னை திருமணம் செய்து கொண்டார். அஞ்சனா கிஷோர் பாண்டே தனது கணவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்காக தனது பெயரை ஆலியா என்று மாற்றிக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

கொடுமைப்படுத்தினார்
நடிகர் நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆலியா, நவாசுதீன் தனக்கு உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தியதாகவும், கழிவறைக்கு செல்லவிடவில்லை, வீட்டின் வேலை ஆட்கள் முன்னிலையில் பூட்டி சிறை வைத்தார் என நவாசுதீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

என் குழந்தை இல்லை
இந்நிலையில், ஆலியா சித்திக் நீதிமன்றத்தில் தனக்கும் நவாசுதீனுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையை நவாசுதீன் ஏற்க மறுத்து வருகிறார். அது என் குழந்தை இல்லை என்று கூறி வருவதால்,தனது குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். மரபணு சோதனையில் உண்மை தெரிந்தவுடன் நவாசுதீனை விவாகரத்து செய்ய தனக்கு முழு சம்மதம் என்றும் ஆலியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











