'அதுக்கு ஒன்னு இல்லை பல காரணம் இருக்கு..' பிரபல நடிகர் மனைவி திடீர் விவாகரத்து.. திரையுலகம் ஷாக்!
மும்பை: பிரபல நடிகரின் மனைவி திடீரென விவகாரத்து கோரி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விவாகரத்துக்கு, ஒரு காரணம் அல்ல, பல காரணம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர், நவாஸூதின் சித்திக். தேவ்டி, பீப்ளி லைவ், கஹானி, பாம்பே டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பயோபிக்கான தாக்கரே, மவுன்டேன் மேன் என்றழைக்கப்படும் மன்ஜியின் வாழ்க்கை கதை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார்.

'பேட்ட' வில்லன்
தமிழில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. பல படவிழாக்களில் நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நவாஸுதின் சித்திக், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ரம்ஜான் பண்டிகை
இந்நிலையில், நடிகர் நவாஸூதின் சித்திக் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட, தனது குடும்பத்துடன் உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு கடந்த 11 ஆம் தேதி சென்றார். இதற்கான சிறப்பு அனுமதி வாங்கி இருந்தார். அங்கு சென்று சேர்ந்ததும், சுகாதாரத் துறையினர் அவர்களை சோதனை செய்தனர்.

கொரோனா பாதிப்பு
அவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன. அதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் 14 நாள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் நவாஸூதின் சித்திக் உட்பட அவர் குடும்பத்தினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விவாகரத்து
அவருடன் அவர் மனைவி ஆலியாவும் சென்றதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் ஆலியா, நவாஸூதின் சித்திக்கை விவாகரத்து செய்துள்ள தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸை கடந்த 7 ஆம் தேதி, ஆலியாவின் வழக்கறிஞர் மெயிலில் அனுப்பியுள்ளார். வாட்ஸப்பிலும் அனுப்பி உள்ளார். ஆனால், நவாஸூதின் எந்த பதிலும் அனுப்பவில்லை என்று ஆலியாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பல காரணங்கள்
இதுபற்றி ஆலியா கூறும்போது, 'விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே தீவிரமானவை' என்று தெரிவித்துள்ளார். ஆலியாவும் நடிகர் நவாஸூதின் சித்திக்கும் காதலித்து 10 வருடத்துக்கு முன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

அஞ்சனா ஆனந்த்
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டே இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. பின்னர் சமாதானம் ஆயினர். இப்போது ஆலியா, விவாகரத்து வரை சென்றுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அஞ்சனா ஆனந்த் கிஷோர் பாண்டே என்ற தனது முந்தைய பெயருக்கு அவர் மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











