அடிக்கிற கை தான் அணைக்கும்.. பேட்ட நடிகரின் தம்பியுடன் ஹோலி கொண்டாடிய மனைவி.. பரபரக்கும் பாலிவுட்!
மும்பை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி கொண்டாடிய ஹோலி பற்றித் தான் பாலிவுட்டில் ஒரே பேச்சாக எழுந்துள்ளது.
நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஆண்டு பரபரப்பை கிளப்பினார் நவசுதீனின் மனைவி ஆலியா சித்திக்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மீண்டும் நவாசுதீனுடன் இணைந்து வாழப் போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

காட்டுமிராண்டி போல அடிக்கிறாரு
பேட்ட படத்தில் வில்லன் சிங்காரமாக நடித்து தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் நடிப்பு அசுரனாக கருதப்படும் இவருக்கு கடந்த ஆண்டு அதிக அளவில் குடும்ப பிரச்சனைகள் எழுந்தன. நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா, கணவர் தன்னை காட்டுமிராண்டியை போல அடிக்கிறாரு அவருடன் சேர்ந்து வாழப் போவதில்லை என பரபரப்பை கிளப்பினார்.

விவாகரத்து நோட்டீஸ்
மேலும், நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்யப் போவதாகவும், அவரது குடும்பம் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் ட்விட்டரில் இணைந்து ஏகப்பட்ட பதிவுகளை போட்டு பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கினார். நடிகர் நவாசுதீன் சித்திக்கிற்கு விவாகரத்து நோட்டீஸையும் ஆலியா அனுப்பினார்.

தம்பி அடிச்சுட்டாரு
நவாசுதீன் சித்திக் மட்டுமின்றி அவரது சகோதரர் ஷாமாஸும் தன்னை அடித்தார் என பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் ஆலியா நவாஸ். மேலும், தனக்கு எந்த ஆண் நண்பருடன் தொடர்பு இல்லை என்றும், அதற்காக எல்லாம் தான் விவகாரத்து கேட்கவில்லை என்றும் சில மீடியாக்களில் வரும் செய்திகள் திட்டமிட்ட சூழ்ச்சி என்றும் பொங்கி எழுந்தார்.

சேர்த்து வைத்த கொரோனா
இந்நிலையில், சமீபத்தில் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்ட ஆலியாவுக்கு பக்க பலமாக குழந்தைகளை பார்த்துக் கொண்ட நவாசுதீன் சித்திக் மீது, பரிவு எற்பட்டு, தற்போது தான் அவரை முழுமையாக புரிந்து கொண்டேன். இனி விவாகரத்துக்கான பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

நவாஸ் தம்பியுடன்
மேலும், நவாசுதீன் சித்திக்கின் தம்பி ஷாமாஸ் உடன் நேற்று ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் ஆலியா. தன்னை கொடூரமாக தாக்கியதாக ஷாமாஸ் மீது குற்றம் சாட்டிய நிலையில் அவருடன் ஹோலி கொண்டாடி பழைய பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கட்டியுள்ளார். கொரோனா இரண்டாவது அலை மும்பையில் அதிகரித்து வருவதால், கசாரா எனும் இடத்தில் உள்ள நவசுதீன் சித்திக்கின் பண்ணை வீட்டில் குழந்தைகள் ஷோரா மற்றும் யானியுடன் வசித்து வருகிறார்.
Recommended Video

ஈகோவை விட்டுட்டேன்
மகள் ஷோராவுக்கு அப்பா நவாசுதீன் மீது அளவு கடந்த பாசம் உள்ளது. குழந்தைகளுக்காக என்னுடைய ஈகோவை நான் விட்டு விட்டேன். அவரும் என்னை புரிந்து கொண்டார். வரும் ஏப்ரல் 5ம் தேதி படப்பிடிப்புகளை முடித்து விட்டு எங்களோடு வந்து தங்க உள்ளார் என்றும் ஆலியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











