தன்னைப் பற்றி அவதூறாக பேட்டி கொடுப்பதா? விவாகரத்து கேட்ட மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல நடிகர்!

By

மும்பை: விவாகரத்து கேட்ட தனது மனைவிக்கு பிரபல ஹீரோ நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Petta வில்லன் Nawazuddin க்கு மனைவி விவாகரத்து Notice | Petta, Sacred Games

பிரபல இந்தி நடிகர், நவாஸூதின் சித்திக். பீப்ளி லைவ், கஹானி, பாம்பே டாக்கீஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பயோபிக்கான தாக்கரே, மவுன்டேன்மேன் என்றழைக்கப்படும் மன்ஜியின் வாழ்க்கை கதை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார்.

'பேட்ட' வில்லன்

'பேட்ட' வில்லன்

தமிழில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. பல பட விழாக்களில், நடிப்புக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நவாஸுதின் சித்திக், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், மும்பையில் வசித்து வருகிறார்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

இவரது மனைவி ஆலியா. கடந்த 11 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ஆலியா, விவாகரத்து கேட்டு, வழக்கறிஞர் மூலம் கடந்த மே மாதம் நவாஸூதின் சித்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால், அவர் உடனடியாக எந்த பதிலும் அனுப்பவில்லை என்று ஆலியாவின் வழக்கறிஞர் கூறி இருந்தார்.

பல காரணங்கள்

பல காரணங்கள்

இந்த விவாகரத்து விவகாரம் பாலிவுட் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பரபரப்பானது. இதுபற்றி ஆலியா கூறும்போது, 'விவாகரத்து கோரி இருப்பது உண்மைதான். அதற்கு ஒரு காரணம் அல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே தீவிரமானவை' என்று தெரிவித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டே இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.

விட்டுவிட்டார்

விட்டுவிட்டார்

இதையடுத்து தனது ஒரிஜினல் பெயரான அஞ்சனா ஆனந்த் என்ற பெயருக்கு மாறினார் ஆலியா. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டாமல் விட்டுவிட்டார் என்றும் தனக்கு மாதாமாதம் தரும் பணத்தையும் கொடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இதை, மறுத்திருந்தார் நவாஸூதின் சித்திக் வழக்கறிஞர்.

எழுத்துப்பூர்வ விளக்கம்

எழுத்துப்பூர்வ விளக்கம்

'அவருக்கான பணம் மற்றும் குழந்தைகளின் ஸ்கூல் பீஸ் போன்றவை சரியாக கொடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் வேண்டும் என்றே சித்திக்கின் புகழை கெடுக்கும் விதமாக ஆலியா பேசி வருகிறார். இதற்கு எழுத்துப் பூர்வமான விளக்கம் வேண்டும் என்றும் இனி இதுபோன்ற அவதூறான கருத்துக்களை அவர் மீது கூறக்கூடாது என்றும் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என அவரது வழக்கறிஞர் அட்னன் சேக் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X