இந்தி படிக்கப்போகும் ஒத்த செருப்பு.. இந்த பேட்ட வில்லன் தான் ஹீரோவாம்.. பார்த்திபனே சொல்லிட்டாரு!

Recommended Video

Oththa seruppu OSCAR Nomination | Parthiban | Oscar Award

சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது.

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் ஹீரோ நவாசுதின் சித்திக் தான் இந்தியில் மாசிலாமணியாக தனியாளாக கலக்கவுள்ளார்.

நவாசுதின் சித்திக்குடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பார்த்திபன் இந்த அப்டேட்டை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

சிறந்த திரைக்கதை

கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியானது. விமர்சன ரீதியாக அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நேற்று இரவு நடந்த ஜீ சினி விருது விழாவில் சிறந்த திரைக்கதை விருது நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.

தங்கப் பேனா

இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றது. இயக்குநரும் பார்த்திபனின் குருவுமான பாக்யராஜ் பார்த்திபனுக்கு விருதுடன் கூடவே ஒரு தங்கப்பேனாவை கொடுத்தும் கெளரவித்துள்ளார்.

’வச்சி செய்யப் போறோம்’

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது அந்த படத்தை பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் நடிப்பில் பார்த்திபன் இயக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையின் போது என்று தற்போது பார்த்திபன் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்டேட்னா இப்படி இருக்கணும்

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் நவாசுதின் சித்திக் நடிக்கவுள்ளார் என்ற அப்டேட்டை பார்த்திபன் கொடுத்த நிலையில், அந்த ட்வீட்டுக்கு கீழே அப்டேட்னா இப்படி இருக்கணும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

அளவெடுத்து செஞ்ச பீஸ்

இந்த மாதிரி கேரக்டருக்குன்னே அளவு எடுத்து செஞ்ச பீஸ் தான் நவாசுதின் சித்திக் என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

நீங்களே நடிக்கலாம்

மாசிலமணி கதாபாத்திரத்தில் உங்களை தவிர வேறு யாரும் செட்டாக மாட்டார்கள். இந்தியிலும் நீங்களே நடிக்கலாம் என இந்த தீவிர பார்த்திபன் ரசிகர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கோலிவுட்டிலேயே தியேட்டரில் பார்க்க ஆள் வரவில்லை. பாலிவுட்டிலாவது கொஞ்சம் சம்பாதிக்க விடுங்கப்பா..

நடிப்பு மிருகம்

வட இந்தியாவின் பசி கொண்ட அலட்டல் இல்லாத நடிப்பு மிருகம் நவாசுதின் சித்திக் என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.

அப்போ ஆஸ்கர் தான்

இந்தி படமா அப்போ ஆஸ்கர் பரிந்துரை நிச்சயம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X