லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முன்னாள் காதலிகள்: பம்மிய பிரபல நடிகர்

By Siva

மும்பை: முன்னாள் காதலிகள் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்ததால் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தான் எழுதிய புத்தகத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தனது வாழ்க்கை வரலாற்றை ஆர்டினரி லைஃப் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் தனது முன்னாள் காதலிகள் நிஹாரிகா சிங், சுனிதா பற்றி தெரிவித்துள்ளார்.

புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து அறிந்த சுனிதா, நிஹாரிகா கோபம் அடைந்தனர்.

கோபம்

கோபம்

தனக்கு திருமணமானதை மறைத்து நவாஸ் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார். அந்த புத்தகத்தை விற்க அவர் ஏதேதோ கதை எழுதியுள்ளார் என்று நிஹாரிகா தெரிவித்தார்.

உறவு

உறவு

மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நான் நிஹாரிகாவின் வீட்டிற்கு சென்றேன். அவர் கதவை திறந்ததும் வீடு முழுக்க மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். இதையடுத்து நேராக படுக்கையறைக்கு சென்று உறவு கொண்டோம் என்று நவாஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பணம்

பணம்

நான் அப்பொழுது ஏழையாக இருந்ததால் என் முதல் காதலி சுனிதா என்னை பிரிந்து சென்றார் என்று நவாஸ் தெரிவித்தார். இதை சுனிதா மறுத்துள்ளார். நவாஸின் மோசமான புத்தியால் தான் பிரிந்ததாக சுனிதா கூறியுள்ளார்.

வழக்கு

வழக்கு

நிஹாரிகாவுடன் உறவு கொண்டதை விளக்கமாக எழுதி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டதாகக் கூறி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நவாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாபஸ்

வாபஸ்

நிஹாரிகா, சுனிதாவின் கோபத்தை அடுத்து தனது புத்தகத்தை வாபஸ் பெறுகிறார் நவாஸ். மேலும் தனது புத்தகம் மூலம் யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X