Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
மாயமான நடிகை உடல் கிடைத்தது.. மகனை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பரிதாபம்! தொடரும் 'க்ளீ' மர்மம்!
கலிபோர்னியா: ஏரியில் மாயமான பிரபல நடிகையின் உடல் ஆறு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. அவர் மகனை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்டிருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. வயது 33. சினிமா, டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இவர், நடிகர் ரியான் டோர்சே என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார்.
விவாகரத்து
2 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் பிக்னிக் செல்ல முடிவெடுத்தார். கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அங்கு ஒரு படகை, வாடகைக்கு அமர்த்தி சென்றார்.
படகில் தூங்கியபடி
குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த பராமரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் அந்தப் படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. அதில் அவர் மகன் மட்டுமே இருந்துள்ளான். நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூங்கியபடி இருந்துள்ளான். அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது.
ஹெலிகாப்டர்
இதையடுத்து போலீசாரும் மீட்பு படையினரும் நயா ரிவேராவைத் தேடி வந்தனர். ஹெலிகாப்டர், ட்ரோன் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஏரியின் அருகே காரில் இறங்கி, தனது மகனுடன் நயா செல்வதும், படகில் மகன் மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பின்னர், ரியாவின் 4 வயது மகன் அவனது தந்தை ரியான் டோர்சேயிடம் ஒப்படைக்கப்பட்டான்.
உடல் கண்டெடுப்பு
இந்நிலையில் ஆறு நாட்களுக்குப் பிறகு நயா ரிவேராவின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நயாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் 35 முதல் 60 அடி ஆகும். அந்தப் பகுதியில் நயாவும் அவர் மகனும் நீந்தியுள்ளனர் என்றும் பின்னர், மகனை படகில் ஏற்றியதாகவும், தான் ஏற முயன்றபோது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு நகன்றிருக்கும் என்றும் அதனால் தண்ணீருக்குள் அவர் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள்
நயா ரிவேராவின் மறைவுக்கு சினிமா, டிவி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரிவேரா, க்ளீ (Glee) என்ற தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர். இந்த தொடரில் நடித்த, கோரி மான்டீத் ஏழு வருடங்களுக்கு முன், மதுவில் போதைப்பொருள் கலந்து குடித்ததால் பலியானார். ரிவேராவின் முன்னாள் காதலரான மார்க் சல்லிங் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இப்போது இந்த தொடரில் நடித்த நயா ரிவேராவும் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.