நாயே பேயே… நாய்க்கு பதில் பேயைக் கடத்தும் நாயகன்
சென்னை: நாயே பேயே திரைப்படத்தில், திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவன், ஒரு ஜாக்பாட் திருட்டுடன் வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்து, பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்களை கடத்தும்போது, தவறுதலாக பேயை கடத்தி விடுகிறான். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கி சின்னாபின்னமாவதை நகைச்சுவையோடு திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சக்திவாசன்.
பல படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ள கோபி கிருஷ்ணா முதல் முறையாக நாயே பேயே எனும் நகைச்சுவை, லவ் கலந்த திரில்லர் என ஒரு வித்தியாசமான படத்தை தயாரிக்கிறார். பேய் படங்கள் போல் பழிவாங்குதலை மட்டும் மையமாக வைத்து எடுக்காமல் காதல் கலந்த ஒரு திரில்லர் படத்தை நகைச்சுவையுடன் தயாரித்திருக்கும் ஒரு பேய் படம் நாயே பேயே.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பெயராக இருந்தால் அது மக்களை எளிதில் சென்றடையும் என்ற எண்ணத்தில் இந்த பெயரை படத்தின் டைட்டிலாக வைத்துள்ளோம். படத்தை பார்க்கும் போது அந்த டைட்டிலுக்கும் கதைக்கும் உள்ள தொடர்பு என்னவென்பது புரியும் என்றார் தயாரிப்பாளர் கோபிகிருஷ்ணா.
பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குநர் சக்திவாசன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் நிரன் சந்தர். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பேயாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான ஜானர்களில் அமைக்கப்படுகின்றன. தினேஷ் மாஸ்டர் ஒரு குப்பை கதை படத்திற்கு பிறகு நடிக்கும் அடுத்த படம் நாயே பேயே.
பிஸியான நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன் மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில்லாத அவன் அவ்வப்போது சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நண்பர்களோடு சந்தோஷமாக இருக்கிறான்.
இந்நிலையில், ஒரு ஜாக்பாட் திருட்டுடன் வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்து, பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படும் விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்களை கடத்தும்போது, தவறுதலாக பேயை கடத்தி விடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கி சின்னாபின்னமாவதை நகைச்சுவையோடு திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சக்தி வாசன்.
இதுவரையில் எடுக்கப்படாத ஒரு வித்தியாசமான கதையம்சம் என்பதால் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications











