Nayangan Re-Release: “நாயகன் மீண்டும் வரார்...” கமல் பிறந்தநாள் சம்பவங்கள் லோடிங்!!
சென்னை: விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசன் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியன் 2, கல்கி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் உலகநாயகன்.
இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு படங்கள் கமல்ஹாசன் லைன்-அப்பில் உள்ளன.
இந்நிலையில், கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தரமான இரண்டு சம்பவங்கள் லோடிங் ஆகி வருகின்றன.

ரீ-ரிலீஸாகும் நாயகன்: விக்ரம் படத்திற்குப் பின்னர் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. அதேநேரம் பிரபாஸின் கல்கி படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் உலகநாயகன். இந்த இரண்டு படங்களுமே அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே வினோத் இயக்கத்தில் KH 233, மணிரத்னம் இயக்கத்தில் KH 234 என மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன்.
இதில், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இதே கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கோலிவுட்டின் காட்ஃபாதர் என நாயகன் படத்தை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வேலு நாயக்கர் கேரக்டரில் நடிப்பில் அசுரத்தனம் காட்டியிருந்தார் கமல்ஹாசன்.
அதன்பின்னர் மீண்டும் இணையாத கமல் - மணிரத்னம் கூட்டணி, தற்போது KH 234 படத்தில் மாஸ் காட்டவுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தான் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி, KH 234 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு கமல் பிறந்தநாள் தினத்தில் தான், KH 234 அபிஸியல் அப்டேட் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், KH 234 நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி கமல், மணிரத்னம் இருவருமே எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. மேலும், இதில், கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக, நாயகன் திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளதாம்.
அதன்படி, நவம்பர் 3ம் தேதி நாயகன் மீண்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் KH 234 டைட்டில் டீசர், இன்னொரு பக்கம் நாயகன் ரீ-ரிலீஸ் என கமல் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ட்ரீட் கிடைக்கவுள்ளது. சமீபத்தில் தான் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு ரீ-ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. அதன் தொடர்ச்சியாக ஹேராம் திரைப்படம் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
கமல்ஹாசனின் பேசும் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்த வரிசையில் நாயகன் திரைப்படம் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











