நாயகன் படம் ஒரு சரியான சுட்ட வடை.. இத்தனை படங்களில் இருந்து காப்பி.. தயாரிப்பாளர் மகனே சொல்லிட்டாரே!

சென்னை: முக்தா ஸ்ரீனிவாஸ் மகன் முக்தா ரவி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாயகன் படம் குறித்த ஏகப்பட்ட ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார். வரதராஜ முதலியார் எனும் மும்பை டான் பற்றிய கதை என சொல்லப்படும் நாயகன் படத்திற்கும் வரதராஜ முதலியாருக்கும் சம்மந்தம் இல்லை என்கிற என்ஓசி கொடுத்த பின்னர் தான் நாயகன் படமே வெளியானது என ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கி உள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நைசாக நாயகன் படத்தில் இருந்து கழட்டி விட்டு அந்த ரோலிலும் தானே நடித்துத் தான் கமல்ஹாசன் தேசிய விருது வென்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Nayakan copied from many hollywood movie scenes revealed by Muktha Ravi

மேலும், பல ஹாலிவுட் படங்களில் இருந்து ஒவ்வொரு காட்சிகளாக சுட்டு சொருகி வைத்து உருவாக்கியது என்றும் மணிரத்னம் மட்டுமில்லை 6 இயக்குநர்கள் நாயகன் படத்தை இயக்கினர் என்றும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை அடுக்கியிருக்கிறார்.

வரதராஜ முதலியார் குடும்பமே ஷாக்: படத்தின் 3வது காட்சியிலேயே விபச்சார விடுதியில் இருந்து சரண்யா பொன்வண்ணனை கமல்ஹாசன் திருமணம் செய்து அழைத்து வரும் காட்சியை பார்த்த வரதராஜ முதலியார் குடும்பமே அதிர்ச்சியடைந்து விட்டனர். இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்களை ஒருவழியாக சமாளித்தனர். அந்த காட்சியே பிரபல வங்காள எழுத்தாளர் சரத்சந்திர சாட்டர்ஜி எழுதிய நாவலில் இருந்து உருவப்பட்ட சீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது என முக்தா ரவி பேசியுள்ளார்.

Nayakan copied from many hollywood movie scenes revealed by Muktha Ravi

சென்சார் சிக்கல்: சென்னையில் இந்த படத்துக்கு சென்சார் செய்ய முடியாது என சொல்லி விட்டனர். மும்பைக்கு படத்தை எடுத்துக் கொண்டு போகவும் உத்தரவிட அங்கே சென்றால், வரதராஜ முதலியார் படம் இது இல்லை என அவரிடம் இருந்தே ஒரு லெட்டர் வாங்கி வரும்படி NOC - No Objection Certificate கொடுத்தால் மட்டுமே படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என சொல்ல, சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த வரதராஜ முதலியாருக்கு இந்த படத்தை போட்டுக் காட்டி ஒரு வழியாக என்ஓசி வாங்கித்தான் படத்தை வெளியிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

Nayakan copied from many hollywood movie scenes revealed by Muktha Ravi

சரியான சுட்ட வடை: ஆரம்பத்திலேயே காட்ஃபாதர் படத்தை தான் முக்தா பிலிம்ஸ் உருவாக்க நினைத்தது. சிவாஜி கணேசன், கமல்ஹாசனை வைத்து உருவாக்க அப்பா நினைத்தார். ஆனால், அதன் பின்னர் கமலே அந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன் என்றும் வரதராஜ முதலியார் கதையையும் மணிரத்னத்தையும் அழைத்து வந்தார். ஆனால், படத்தின் மேக்கிங் முழுவதும் காட்ஃபாதர் படம் பாணியில் தான் இருக்கும். மேலும், நிலா அது வானத்து மேல பாடலில் போதைப் பொருளை கடலில் உப்புக் கட்டி கரைக்கும் காட்சி ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் அமெரிக்கா எனும் ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சியை எடுத்துத் தான் கமல்ஹாசன் பயன்படுத்தியிருப்பார் என்றும் முக்தா ரவி நாயகன் படம் பல இடங்களில் இருந்து சுட்ட வடை என பேசியுள்ளார்.

Nayakan copied from many hollywood movie scenes revealed by Muktha Ravi

ஏகப்பட்ட படங்கள்: அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், குணா என கமல் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட படங்கள் ஹாலிவுட் படங்களில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டுத்தான் எடுக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் எத்தனை ஹாலிவுட் படங்கள் ஒளிந்திருக்கப் போகிறதோ தெரியவில்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X