»   »  நயனதாரா தற்கொலைக்கு முயற்சி?

நயனதாரா தற்கொலைக்கு முயற்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை நயனதாரா தற்கொலைக்கு முயன்றதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்குப் பின்னர் நயனதாரா ஹைதராபாத் போய் விட்டார். அங்கு தங்கியிருந்து தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் நயனதாராவும், சிம்புவும் தனிமையில் எடுத்துக் கொண்ட அந்தரங்க முத்தப் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இதற்குசிம்புதான் காரணம் என நயனதாரா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இது கிராபிக்ஸ் வேலையாக இருக்கலாம் என சிம்புவின் தந்தையான இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியிருந்தார். ஆனால் இதுஉண்மையான படங்கள்தான், சிம்புவின் வக்கிரப் புத்திதான் இந்த புகைப்படங்கள் வெளியானதற்குக் காரணம் என நயனதாரா உண்மையை ஒத்துக்கொண்டார்.

இந்த நிலையில் நயனதாரா குறித்து நேற்று மாலைக்கு மேல் திடீரென பரபரப்பு வதந்திகள் பரவின. அவர் தற்கொலை செய்து கொண்டதாகசெல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் செய்திகள் பரவவே நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திராவிலும் இந்த வதந்தி பரவியது. இதையடுத்து நயனதாராவின் கேரள வீடு,ஹைதராபாத்தில் தங்கியுள்ள ஹோட்டல் மற்றும் அவரது மேனேஜர் அஜீத் ஆகியோருக்கு சரமாரியாக போன் கால்கள் வர ஆரம்பித்தன.

இந்த செய்தி முற்றிலும் வதந்தி என அஜீத் கூறியுள்ளார். நயனதாரவுடன் நான் 4 முறை பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். எந்தப் பாதிப்பும்இல்லை.

தற்கொலை வதந்திகள் குறித்து அவர் கவலைப்படவில்லை. அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. இதற்கெல்லாம் பதில் சொல்லத்தேவையில்லை என்று மட்டும் அவர் தெரிவித்தார் என்றார்.

எங்கு போய் முடியுமோன்னு தெரியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil