தனுஷுடன் குத்தாட்டம் போட்ட நயன்தாரா
சென்னை: தனுஷ் தயாரிக்கும் படத்திற்காக நயன்தாரா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
ஒரு பாடலுக்கு மட்டும் வந்து தலையை காட்டுவதெற்கென்று, சில நடிகைகள் இருந்தாலும், மிகப் பிரபலமான ஹீரோயின்கள் அவ்வாறு குத்தாட்டம் போடும் போது, கோடம்பாக்கம் கொஞ்சம் குலுங்கத்தான் செய்கிறது.
ரஜினியுடன் 'சிவாஜி, விஜய்யுடன் 'சிவகாசி படங்களில் கெஸ்ட் ரோல் ஏற்று ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் நயன்தாரா. டாப் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்ததும் கெஸ்ட் ரோல்களை தவிர்த்தார்.

நயனின் ‘ எதிர்நீச்சல்’...
சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கடந்து எதிர்நீச்சல் போட்டு வந்திருக்கும் நயன்தாரா, தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்‘ படத்துக்காக அவருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் .

சத்தியமா நீ எனக்கு தேவையில்ல....
இதுபற்றி இயக்குனர் துரை செந்தில் கூறும்போது,‘தனுஷ் முதன்முறையாக தயாரிக்கும் இப்படத்தில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிக்கின்றனர். இப்படத்துக்காக ஒரு குத்துப்பாடல் படமாக்கப்பட்டது. அதை நான் எழுதினேன். ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல‘ என்ற பாடலுக்கு அனிரூத் இசை அமைத்தார்.

திரும்பவும் அதே மோகினி....
இப்பாடலுக்காக தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஓட்டல்போன்று செட் அமைக்கப்பட்டது. தனுஷ், நயன்தாரா இருவரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடினார்கள். 3 நாள் ஷூட்டிங் நடந்தது.

தனுஷுக்காக தான்...
நயன்தாராவை குத்துபாடலுக்கு சம்மதிக்க வைக்கும் பொறுப்பை தயாரிப்பாளர் தனுஷ் ஏற்றுக்கொண்டாராம்.
இது ஐஸ்வர்யாவுக்குத் தெரியுமோ.. !


Click it and Unblock the Notifications











